தமிழகத்தில் இருந்து பிரபலமான இசைக்கலைஞர் குடும்பத்தைச் சேர்ந்த சிவஸ்ரீ ஸ்கந்தபிரசாத், வலுவாக தனது வாதங்களை முன் வைக்கும் பாஜகவின் இளம் எம்.பி தேஜஸ்வி சூர்யாவை இன்று திருமணம் செய்து கொண்டார்.
அதன்பிறகே, இசை உலகில் பிரபலமாக இருக்கும் சிவஸ்ரீ ஸ்கந்தபிரசாத், நாடு முழுவதும் யார் எனத் தேடப்பட்டார். சிவஸ்ரீ ஸ்கந்தபிரசாத் சிறந்த இசைக்கலைஞர். கர்நாடக சங்கீதம் அவருக்கு அத்துபடி. அவரது பாடல்கள் யூடியூப் மற்றும் பிற இசை தளங்களில் மிகப்பிரபலம். கர்நாடக பாரம்பரிய இசைப் பாடகியாக கோலோச்சும் சிவஸ்ரீ ஸ்கந்தபிரசாத் ஒரு நடனக் கலைஞரும்கூட. அத்துடன் அவர் 'ஆஹுதி' என்ற அமைப்பை அமைப்பதில் மும்முரமாக இருக்கிறார். இது கலாச்சாரத்தைப் பாதுகாப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட அமைப்பு.

ஆகஸ்ட் 1, 1996 அன்று பிறந்த சிவஸ்ரீ ஸ்கந்தபிரசாத், மிருதங்கக் கலைஞர் சீர்காழி ஜே.ஸ்கந்தபிரசாத்தின் மகள். அவரது தாத்தா கலைமாமணி மறைந்த சீர்காழி ஆர்.ஜெயராமன் பலராலும் போற்றப்பட்ட இசை மேதை. அதே நேரத்தில் அவரது பாட்டி சாந்தி ஜெயராமன், முன்னணி பரதநாட்டிய கலைஞர்களுக்கு பிரபலமான குரல் இசைக் கலைஞராக இருந்தவர். சிவஸ்ரீ ஸ்கந்தபிரசாத் தஞ்சாவூரில் உள்ள சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் உயிரி பொறியியலில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார். டெக். பட்டம் பெற்று, பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தில் பரதநாட்டியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
இதையும் படிங்க: எடப்பாடியாருக்காக பாஜக தலைமையிடம் அண்ணாமலை போட்ட சபதம்... காத்திருக்கும் சஸ்பென்ஸ்..!

தனது குடும்பச் சூழலைப் பின்பற்றி, சிவஸ்ரீ தனது 3 வயதில் கலைமாமணி கிருஷ்ணகுமாரி நரேந்திரன் மற்றும் ஆச்சார்யா சூடாமணி குரு ரோஜா கண்ணன் ஆகியோரை குருவாக ஏற்றுக் கொண்டு பரதநாட்டியம் கற்கத் தொடங்கினார். அதன் பிறகு சிவஸ்ரீ தனியாக பல பரத நாட்டிய நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மானின் பொன்னியின் செல்வன் -1 படத்தில் ஒரு பாடலைப் பாடியுள்ள சிவஸ்ரீ ஸ்கந்தபிரசாத், தனது குரு ஏ.எஸ்.முரளியிடம் பாரம்பரிய கர்நாடக இசையில் பயிற்சி பெற்றுள்ளார். சிவஸ்ரீ பல சிறப்பு மிக்க இசை விருதுகளை வென்றுள்ளார். பாரத் கலா சூடாமணி, யுவ சம்மான் விருது மற்றும் பஜன் பூஷண் விருதுகளும் முக்கியமானவை. பாடகர் சிவஸ்ரீ ஸ்கந்தபிரசாத், பெங்களூரு தெற்கு பாஜக எம்.பி. தேஜஸ்வி சூர்யாவை இன்று திருமணம் செய்து கொண்டார். எளிதாக நடைபெற்ற இந்த திருமண நிகழ்வில் சிலர் மட்டுமே கலந்து கொண்டனர்.

இந்தியாவில் பல நகரங்களில் நிகழ்ச்சிகளை நடத்தியுள்ள சிவஸ்ரீ ஸ்கந்தபிரசாத், சமூக ஊடகங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்குபவர். சிவஸ்ரீ மெட்ராஸ் சமஸ்கிருதக் கல்லூரியில் சமஸ்கிருத டிப்ளமோவும் பெற்றுள்ளார். அவருக்கு சைக்கிளிங் மிகவும் பிடித்தமான ஒன்று. பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா தேசியத் தலைவர் தேஜஸ்வி சூர்யாவை மணந்ததற்கு முன்பே பிரதமர் மோடி முன்பே பரத நாட்டிய நிகழ்ச்சி நடத்தி பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.
இதையும் படிங்க: Breaking News: A+ சரித்திரப் பதிவேடு குற்றவாளி- பாஜக பிரமுகர், பிரபல ரவுடி படப்பை குணா கைது..!