அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. தமிழ் நாட்டு மக்களின் நலனையும், முன்னேற்றத்தையும் முன்னிலைப்படுத்தும் வகையில், பல்வேறு தரப்பு மக்களைச் சந்தித்து தரவுகளை சேகரித்து, ஆகச் சிறந்த தேர்தல் அறிக்கையினை தயாரிக்கும் பொருட்டு, அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் தமிழ் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளது.
வருகின்ற 7 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை 9 மண்டலங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார்கள் என கூறப்பட்டுள்ளது. பத்து மண்டலங்களாக பிரித்து வரும் இருபதாம் தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலதரப்பட்ட மக்களின் எதிர்பார்ப்புகள் குறித்த தரவுகளை நிர்வாகிகள் கொடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
வரும் ஏழாம் தேதி அன்று வேலூர், சேலம் ஆகிய மண்டலங்களில் அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இதைத்தொடர்ந்து, எட்டாம் தேதி விழுப்புரம், திருச்சி மண்டலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றனர். ஒன்பதாம் தேதி தஞ்சாவூர், சிவகங்கை மண்டலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளன.
இதையும் படிங்க: ஜெயலலிதா மர்ம மரணத்தின் உண்மை என்னாச்சு? சொல்லுங்க முதல்வரே..! TVK சரமாரி கேள்வி..!
பதினொன்றாம் தேதி மதுரை மற்றும் திருநெல்வேலி மண்டலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளனர். இதை எடுத்து பத்தொன்பதாம் தேதி கோவை மண்டலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளனர். இருபதாம் தேதி சென்னை மண்டலத்தில் அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு சுற்றுப்பயணம் நடத்துகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சூரஜ் எங்கே? முறையாக சிகிச்சை பார்க்காமல் அனுப்பி வைத்த திமுக...! அதிமுக கடும் குற்றச்சாட்டு..!