அலெக்ஸிஸ் சுதாகரை, கடந்தாண்டு ஜூனில் மாமல்லபுரம் போலீசார் கைது செய்தனர். இதேபோல் பண மோசடி, ஆள் கடத்தல் தொடர்பாக, கோவை குனியமுத்தூர், துடியலூர் காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளிலும், அலெக்ஸிஸ் சுதாகர் கைது செய்யப்பட்டார்.
பின், குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். குண்டர் தடுப்பு சட்ட உத்தரவை, அறிவுரை கழகம் ரத்து செய்தது. அதைத் தொடர்ந்து, மூன்று வழக்குகளிலும், அலெக்ஸிஸ் சுதாகர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில், மூன்று வழக்குகளிலும் கைது செய்து சிறையில் அடைத்த உத்தரவுகளை ரத்து செய்ய கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், அவர் தனித்தனியாக மனு தாக்கல் செய்தார்.
இதையும் படிங்க: நீதிமன்ற தீர்ப்பு முதல்வருக்கு சம்மட்டி அடி! இனியாச்சு புரிஞ்சுக்கோங்க.. நயினார் நாகேந்திரன்..!

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், “மனுதாரரிடம் மூன்று வழக்குகளில் கைதுக்கான காரணங்கள் தெரிவிக்கப்படவில்லை. அதேபோல, குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவிக்கவில்லை. இது, உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு விரோதமானது. எனவே, அலெக்சிஸ் சுதாகரை கைது செய்து, சிறையில் அடைத்த உத்தரவுகள் செல்லாது,” என உத்தரவிட்டார்.
இந்த வழக்கின் பின்னணியை ஆராய்ந்து பார்த்தால் காவல்துறையினருக்கு சிக்கல் உருவாகும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. அதாவது, காவல்துறை உயர் அதிகாரியின் பேச்சைக் கேட்டுக்கொண்டு, அடிப்படை முகாந்திரம், காரணங்கள் இல்லாமல் கைது செய்யப்படுகின்றனர். கைதுக்கான காரணங்களை நீதிமன்றத்திலும் முறையாக தெரிவிப்பதில்லை.
தவிர, இந்த வழக்கின் அடிப்படையில் சிறையில் இருக்கும் மற்றவர்களும் உடனடியாக ஃபெயிலில் வந்துவிடலாம். அதாவது ஒரு வழக்கறைஞரைக் கைது செய்யும் போதுக்கூட சரியான நடைமுறைகளைப் பின்பற்றாமல், உயர் அதிகாரிகளின் அழுத்தத்தால் உடனடியாக கைது செய்வதுதான் இதற்கெல்லாம் காரணமாகிவிடுகிறது.
இது போன்ற சட்டவிரோத கைது நடவடிக்கைகள் தொடரும் பட்சத்தில், காவல்துறை அதிகாரிகளுக்கு சிக்கல்கள் ஏற்படும் வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள் சட்டவல்லுநர்கள்! காவல்துறைக்கு இது பெரும்பின்னடைவாகவே கருதப்படுகிறது.
இதையும் படிங்க: முடியவே முடியாது! பொதுச் செயலாளர் விவகாரத்தில் இபிஎஸ் மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்...