கோவை மாநகராட்சி கூட்டரங்கில் நடைபெற்ற மாமன்ற அவசரக் கூட்டத்தில் 103 பணிக்களுக்கான தீர்மானங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது, முன்னதாக அதிமுக கவுன்சிலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாநகராட்சி மாமன்ற அவசரக் கூட்டம் மேயர் ரங்கநாயகி, மற்றும் ஆணையாளர் சிவகுருபிரபாகரன் தலைமையில் விக்டோரியஹால் கூட்டரங்கில் நடைபெற்றது. முன்னதாக இக்கூட்டத்தில் பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பல்வேறு பணிகளுக்கான 103 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதையும் படிங்க: அவரு எடுபுடி கோழைச்சாமி.. கோடநாடுன்னு சொன்னாலே தொடை நடுங்குதே! பந்தாடிய அமைச்சர்..!

முன்னதாக மாநகராட்சியில் பகுதிகளில் உள்ள மின் மயானங்கள் சரியான நேரத்தில் செயல்படுவது இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது குறித்து மேயர் ரங்கநாயகி அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அப்போது இரண்டு சிப்டுகளாக இரவு 9 வரை மின் மயானம் செயல்பட அறிவுறுத்தினார். தொடர்ந்து மாநகராட்சி அதிமுக கவுன்சிலர் பல்வேறு கேள்விகளை கேட்டு கூச்சலில் ஈடுபட்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது திமுக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கவுன்சிலர்கள் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து 103 பணிகளுக்கான தீர்மானங்கள் இக்கூட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இதுகுறித்து பேசிய அதிமுக கவுன்சிலர் பிரபாகரன் “இன்று நடந்த மாமன்ற கூட்டம் திமுகவின் கொள்கை பரப்பு கூட்டமாக நடைபெற்றது. நூற்றுக்கணக்கான விஷயங்கள் குறிப்பில் கொடுத்துவிட்டு, அரை மணி நேரத்தில் கூட்டத்தை முடித்துவிட்டு சென்றுள்ளனர். வாரம் தோறும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் மக்கள் குறை தீர்ப்பு கூட்டங்களும் தற்போது நடத்தப்படுவதில்லை” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: இதில் என்ன பெருமை வேண்டிக்கிடக்கு? எடப்பாடியை கடுமையாக விளாசிய கனிமொழி!!