சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரத்தில் கோவில் காவலாளியாக பணியாற்றிய 28 வயது இளைஞர் அஜித்குமார், நகை திருட்டு வழக்கு தொடர்பாக திருப்புவனம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது விசாரணையின்போது அவர் உயிரிழந்தார். பிரேத பரிசோதனை அறிக்கையில், அவரது உடலில் 18 இடங்களில் காயங்கள், மூளையில் ரத்தக்கசிவு மற்றும் கடுமையான தாக்குதலுக்கு ஆளானதற்கான அறிகுறிகள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அஜித்குமாரின் உறவினர்கள், காவலர்களின் கடுமையான தாக்குதலால் மரணம் ஏற்பட்டதாக குற்றம்சாட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொடர்ந்து, இளைஞர் மரண வழக்கில் கைதான 5 காவலர்களையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி வெங்கடேஷ் பிரசாத் உத்தரவு பிறப்பித்துள்ளார். காவலர்கள் பிரபு. ஆனந்த், கண்ணன், ராஜா, சங்கரமணிகண்டன் ஆகியோ சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: சித்திரவதை செஞ்சிருக்காங்க.. சுயாதீன நடவடிக்கை எடுங்க! மனித உரிமைகள் ஆணையத்துக்கு நயினார் முக்கிய கோரிக்கை..!

இதனையடுத்து அஜித் குமார் மரணம் தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளைகள் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையில் சிவகங்கை மாவட்ட எஸ் பி ஆஷிஷ் ராவத் மீது கடும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. தாக்குதல் சம்பவம் நடத்தப்பட்டபோது அவர் காவல் நிலையத்தில் தான் இருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஷ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. திருப்புவனம் இளைஞர் கொலை வழக்கை தொடர்ந்து எஸ்.பி ஆசிஷ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். எனவே, ராமநாதபுரம் எஸ்பி சந்தீசுக்கு சிவகங்கை காவல் கண்காணிப்பாளராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதனிடையே, மாவட்ட எஸ்பியை மாற்றம் செய்தது ஏன் என உயர் நீதிமன்ற மதுரை துணை நீதிபதிகளை கேள்வி எழுப்பியுள்ளனர். முதுகு உன்னையை மறைக்கும் முயற்சிப்பதாக காவல் துறையை எச்சரித்த நீதிபதிகள் சிவகங்கை மாவட்ட எஸ் பி சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டும் என்றும் யார் உத்தரவின் பேரில் சிறப்பு குழு விசாரணை என டிஜிபி பதிலளிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அஜித் கொலையை மறைக்க ரூ.50 லட்சம் பேரம்.. நீதிமன்றத்தில் திடுக்கிடும் குற்றச்சாட்டு.. அவிழும் முடிச்சுகள்!