சென்னையில் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். ஏற்கனவே கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு டாஸ்மாக் தொடர்பாக சென்னையில் தலைமை இடமாக இருக்கக்கூடிய டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனைக்கு அடுத்தபடியாக டாஸ்மாக் துறையில் ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்தி இருக்கப்பட்டதாக அமலாக்கத்துறை அதிகாரப்பூர்வ செய்தி வெளியிட்டது. அதன் அடிப்படையில் தொடர்ச்சியாக டாஸ்மாக் மேலாண் இயக்குனர் விசாகன், டாஸ்மாக் அதிகாரிகள் ராம துரைமுருகன் மற்றும் சங்கீதா உள்ளிட்டோருக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பி இருந்தார்கள்.

இந்த சம்மன் அடிப்படையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு இந்த அதிகாரிகள் சென்னை நுங்கம்பாக்கத்தில் இருக்கக்கூடிய அமலாக்கத்தை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்திருந்தார்கள். இருப்பினும் இந்த விவகாரம் தொடர்பாக மீண்டும் அமலாக்கத்தை அதிகாரிகள் சோதனை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் டாஸ்மாக் மேலாண் இயக்குனர் விசாகன் வீட்டிலும் தற்பொழுது சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் டாஸ்மாக் தொடர்பான அதிகாரிகள் அதேபோன்று அமைச்சருக்கு தொடர்பான அதிகாரிகள் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: காலையிலேயே குவிந்த அதிகாரிகள்; பிரபல தயாரிப்பாளர் வீட்டில் அமலாக்கத்துறை தீவிர சோதனை!

ஏற்கனவே ஆயிரம் கோடி ரூபாய் மறைக்கப்பட்டதை தொடர்ந்து மேலும் அவருடைய ஆவணங்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. அதன் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாக அமலாக்கத்ததுறை அதிகாரிகள் தகவல் தெரிவித்திருக்கிறார்கள். சென்னையில் மட்டும் ஐந்திற்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாக முதற்கட்ட தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் இந்த சோதனையானது இரண்டு நாட்கள் வரை தொடரும் என அதிகாரிகள் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இன்னும் எவ்வளவு ஆவணங்கள் எடுக்கப்படுகிறது. அதே போன்று எவ்வளவு கோடி ரூபாய் மறைக்கப்பட்டிருக்கிறது என்பது தொடர்பான முழு அறிக்கை இந்த சோதனை முடிவில் தெரியவரும் என அதிகாரிகள் தரப்பிலிருந்து தகவல்கள் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதையும் படிங்க: பள்ளிக்காக ஒதுக்கப்பட்ட ₹100 கோடி வக்ஃபு சொத்து மோசடி..! ED அதிரடி சோதனை..!