பொங்கல் திருநாளைக் கொண்டாடுவதற்காக லட்சக்கணக்கான மக்கள் சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு செல்லத் திட்டமிட்டிருக்கும் நிலையில், இதைப் பயன்படுத்திக் கொண்டு தனியார் ஆம்னி பேருந்து நிறுவனங்கள் விண்ணை முட்டும் அளவுக்கு கட்டணத்தை உயர்த்தி இருப்பதாகவும் அரசின் விதிகளை மீறி அப்பட்டமாக கட்டணக் கொள்ளை நடைபெறும் நிலையில், அதைத் தடுக்க திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கது என்றும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்து இருந்தார்.
சென்னையிலிருந்து நாளை 13-ஆம் தேதியும், நாளை மறுநாள் 14-ஆம் தேதியும் மதுரை செல்வதற்குன் ரூ.4,000 வரையிலும், நெல்லை செல்ல ரூ.4,500 வரையிலும், கோவைக்கு ரூ.3,800 வரையிலும் கட்டணமாக வசூலிக்கப்படும் என்று ஆம்னி பேருந்துகள் அறிவித்துள்ளது என்றும் கூறினார்.

இந்தக் கட்டணம் விவரங்கள் ஆன்லைன் முன்பதிவு இணைய தளங்களில் வெளியிடப்பட்டு முன்பதிவுகள் செய்யப்பட்டு வருவதாகவும் ஆனாலும் ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளையை தடுக்காமல் திமுக அரசு வேடிக்கைப் பார்த்து வருகிறது என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
இதையும் படிங்க: எனக்கே வேட்டு வைப்பார்- னு நினைக்கல... என் தலைமையில் தான் கூட்டணி... ராமதாஸ் திட்டவட்டம்..!
இதனிடையே, ஆம்னி பேருந்து கட்டண கொள்ளை தொடர்பாக பயணிகள் யாரும் புகார் அளிக்க முன் வருவதில்லை என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்தார். ஆம்னி பேருந்து கட்டண கொள்ளைக்கு அரசு துணை போவதாக பாமக தலைவர் அன்புமணி குற்றம் சாட்டி இருந்த நிலையில் அமைச்சர் சிவசங்கர் இவ்வாறு பதிலளித்தார். புகார் அளிக்கும் பட்சத்தில் கண்டிப்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் உறுதி அளித்துள்ளார். பயணிகள் புகார் அளிக்காத போதிலும் அலுவலர்கள் ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுப்பதாகவும் விளக்கம் கொடுத்தார்.
இதையும் படிங்க: 2026 தேர்தல்... பாமக சார்பில் போட்டியிடனுமா? விருப்ப மனுக்கள் பெற ராமதாஸ் முடிவு... முக்கிய அறிவிப்பு...!