குறிப்பிட்ட தொழில் மட்டும் இன்றி அனைத்து துறைகளிலும் பிரதானமான நகரமாக இருந்து வருகிறது வந்தாரை வாழ வைக்கும் சென்னை. அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் சென்னைக்கு குடிப்பெயர்வோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. மாணவர்கள் தொடங்கி வேலை பார்ப்பவர்கள் என ஒவ்வொருவரும் தன் கனவை நிறைவு செய்து கொள்வதற்காக சென்னையைத் தேடி ஆண்டதோறும் வந்து கொண்டே இருக்கின்றனர்.

அந்த வகையில் எதையும் தாங்கும் இதயம் போல் சென்னையும் ஒவ்வொரு ஆண்டும் கூட்டு கூட்டாக குவியும் மக்களை தாராளமாக கையை விரித்து அணைத்துக் கொள்கிறது. இதனால் நகரின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. நாலடி இருக்கும் இடத்தில் 100 பேர் தங்கும் சூழலை உருவாக்கி வருகிறது என்றே சொல்லலாம். இதனால் விலை மானியங்கள், பொருட்களின் தேவைகள் என அனைத்தும் உயர்ந்து கொண்டே செல்கிறது.
இதையும் படிங்க: மிகவும் சவாலான பணியை முடித்த 'மயில்'.. சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில் புதிய மைல்கல்..!!
மக்கள் தொகையால் நகரின் பல்வேறு இடங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகின்றன. மக்கள் வருவதையும் தடுக்க முடியாது அதே சமயத்தில் மக்களின் அத்தியாவசியத்தையும் நிறைவேற்றாமல் இருக்க முடியாது என கருதி வளர்ச்சி திட்டத்தில் ஒன்றான மெட்ரோ திட்டம் சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் பயணிகள் போக்குவரத்து நெரிசல் இன்றி தப்பிக்க ஒரு பெரும் உதவியாக அமைந்துள்ளது.
முன்னதாக 2015 ஆம் ஆண்டு சென்னையில் மெட்ரோ திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டபோது, அதன் பயனாளர்களின் எண்ணிக்கை சற்று குறைவானதாகவே இருந்தது. ஆனால் அதன் பயனும் அதன் சிறப்பு அம்சங்களும் நாளடைவில் மக்களை தன்வசப்படுத்தியது. குறித்த நேரத்தில் குறித்த இடத்திற்கு செல்ல தவித்த மக்கள் மெட்ரோ திட்டத்தினால் அதனை எளிதாக்க முடிந்தது. இதனால் மெட்ரோவின் பயனாளர்கள் மல மலவென அடுத்தடுத்த ஆண்டுகளில் கணிசமான உயர்வை கண்டது.
இந்நிலையில் சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) பயணிகளுக்கு வசதியான மற்றும் செலவு குறைந்த பயண அனுபவத்தை வழங்குவதற்காக டிஜிட்டல் டிக்கெட்டுகளுக்கு 20% தள்ளுபடி வழங்குவதாக அறிவித்துள்ளது. 2022 நவம்பர் முதல் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த டிஜிட்டல் ஸ்டோர் வேல்யூ பாஸ் (SVP) மூலம், பயணிகள் CMRL மொபைல் ஆப் மூலம் QR கோடு அடிப்படையிலான டிக்கெட்டுகளை எளிதாகப் பெறலாம். இந்த பாஸ், கடைசி ரீசார்ஜ் முதல் ஐந்து ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் மற்றும் குறைந்தபட்சம் 50 ரூபாய் முதல் அதிகபட்சம் 3,000 ரூபாய் வரை ரீசார்ஜ் செய்யலாம்.

இதன் மூலம், பயணிகள் பயணத் தொகையைப் பயன்படுத்தி மீதமுள்ள தொகையை அடுத்த பயணங்களுக்கு எடுத்துச் செல்லலாம். இந்த டிஜிட்டல் பாஸ், தொடர்பு இல்லாத நுழைவை உறுதி செய்யும் வகையில் தினசரி தனித்துவமான QR கோடை உருவாக்குகிறது. மேலும், மெட்ரோ பயணம் மட்டுமல்லாமல், CMRL பார்க்கிங் பகுதிகளிலும் இந்த பாஸைப் பயன்படுத்தி மேலும் தள்ளுபடிகளைப் பெறலாம். Paytm, redBus மற்றும் WhatsApp (+91 8300086000) போன்ற தளங்களிலும் இந்த 20% தள்ளுபடியுடன் கூடிய QR டிக்கெட்டுகளைப் பெறலாம். இது பயணிகளுக்கு நேரத்தை மிச்சப்படுத்துவதோடு, பணமில்லா பயணத்தை ஊக்குவிக்கிறது.
CMRL, தேசிய பொது இயக்க அட்டை (NCMC) முறைக்கு மாறுவதற்கு தயாராகி வருவதாகவும், இதன் மூலம் மேலும் எளிமையான மற்றும் ஒருங்கிணைந்த பயண அனுபவத்தை வழங்குவதாகவும் தெரிவித்துள்ளது. இந்த முயற்சி, சென்னையில் பொது போக்குவரத்தை மேம்படுத்துவதற்கு முக்கிய பங்கு வகிக்கிறது.
இதையும் படிங்க: மிகவும் சவாலான பணியை முடித்த 'மயில்'.. சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில் புதிய மைல்கல்..!!