2026 சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் முனைப்புடன் திமுக செயல்பட்டு வருகிறது. இதற்காக பல்வேறு கட்ட நடவடிக்கைகளை திமுக தொடங்கியுள்ளது. புதிய உறுப்பினர்களை திமுகவில் சேர்க்கும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஓரணியில் தமிழ்நாடு என்ற புதிய உறுப்பினர் சேர்க்கையை திமுக தொடங்கியுள்ளது. ஒரு வாக்குச்சாவடியில் குறைந்தபட்சம் 30 சதவீத வாக்காளர்களை திமுக உறுப்பினர்களாக இணைக்க வியூகம் வகுத்துள்ளது. இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது.
இதையும் படிங்க: 7வது முறையாக திமுக ஆட்சி அமைக்கும்! அறுதியிட்டு கூறிய முதல்வர் ஸ்டாலின்..!

திமுக மாவட்ட செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்பிக்கள் உள்ளிட்டருடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.

2026 சட்டப்பேரவை தேர்தல் பணிகள் மற்றும் புதிய உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்டவை தொடர்பாக காணொளி காட்சி மூலமாக முதல்வர் பல்வேறு ஆலோசனைகளை வழங்குகிறார்.
இதையும் படிங்க: வண்டி வண்டியா பணத்தைக் கொட்டுவார்கள்! மக்களாட்சி முக்கியம்... ஓட்டுக்கு காசு குறித்து விஜய் தாக்கு!