கரூர் மாவட்டம் ஆத்தூர் கிராமம், நாமக்கல் - கரூர் தேசிய நெடுஞ்சாலையின் சின்ன வடுகபட்டி என்ற இடத்தில் பெங்களூருவில் இருந்து நாகர்கோவில் நோக்கி சென்ற தனியார் ஆம்னி பேருந்து முன்னால் சென்ற டிராக்டர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்த நிலையில், 27 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதலமைச்ச ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் வழங்கிடவும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: இதுதான் திராவிட மாடல்! கல்வியின் சமூக நீதிக்கான வெற்றி இது... மகிழ்ச்சியில் முதல்வர்!

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொண்டதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: சுப்ரீம் கோர்ட்டுக்கே சவாலா..? மத்திய அரசுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்..!