தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே நடக்கும் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க கோவையில் இருந்து 8 பேருடன் ஒரு ஆம்னி கார் புறப்பட்டு வந்துள்ளது. இந்த காரை மோசஸ் என்ற 50 வயது நபர் ஓட்டி வந்துள்ளார். இன்று மாலை 4 மணியளவில் சாத்தான்குளம் அருகே சிந்தாமணிக்கும் மீரான்குளத்துக்கும் இடையே கார் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக கார் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்தது.

இதை அடுத்து சாலை ஓரத்தில் இருந்த கிணற்றுக்குள் கார் விழுந்து மூழ்கியது. இதை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் அங்கு வந்த தீயணைப்புத் துறையிர் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: திடீரென பிளந்த சாலை; உள்ளே கவிழ்ந்த கார்.. சென்னை திருவான்மியூரில் அதிர்ச்சி சம்பவம்!!

அந்தக் கிணறு சுமார் 50 அடி ஆழம் கொண்டது என்பதால், சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக தேடியும் யாரையும் கண்டுபிடிக்க முடியவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து ஜேசிபி, கிரேன் இயந்திரங்கள் உதவியுடன் மீட்பு பணி தொடரப்பட்டது.

பெரும் போராட்டத்திற்கு பின் 3 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். பின்னர் 4 மணி நேரத்திற்கு பின் 4 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். ஒன்றரை வயது குழந்தையின் உடலை தேடும் பணி நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: கொலை திட்டம்? நடந்தது என்ன... பகீர் கிளப்பும் மதுரை ஆதீனம்..!