வேலூர் மாவட்டம் விருதம்ப்பேட்டை காவல் நிலையத்தில் கான்ஸ்டபிள் ஆக பணியாற்றி வருபவர் அருண் கண்மணி. இவர் அவரது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது மினி வேன் ஒன்று அவரை இடிக்க வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் காவலர் அருண்குமார் மினி வேன் டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில், காவலர் அருண்குமார் டிரைவரை மிரட்டி அருகில் உள்ள கே.வி.குப்பம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது காவலர் அருண் கண்மணி டிரைவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என காவல் நிலையத்தில் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

அப்போது பணியில் இருந்த பெண் போலீசார் இன்ஸ்பெக்டர் வரும்வரை காத்திருக்குமாறு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அருண் கண்மணி திடீரென அவரது போல சாடையை கழற்றி நிர்வாணமாக நின்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். திடீரென காவலர் அருண் கண்மணி இவ்வாறு செய்ததால் என்ன செய்வதென்று அறியாத பெண் போலீசார் காவல் நிலையத்தை விட்டு உடனடியாக வெளியே ஓட்டம் பிடித்துள்ளனர். பின்னர் அங்கிருந்த சக காவலர்கள் அருண் கண்மணியை சமாதானப்படுத்தி குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் குடிபோதையில் இருப்பதை உறுதி செய்வதற்கான சோதனையை நடத்த முயற்சித்துள்ளனர்.
இதையும் படிங்க: கேட்பாரற்று கிடந்த ரோடு ரோலர்.. லாவகமாக சுருட்டிய மூவர்.. மடக்கிப் பிடித்த போலீஸ்!

தொடர்ந்து மருத்துவமனையிலும் அருண் கண்மணி மருத்துவமனையின் கண்ணாடிகளை உடைத்து ரகளை ஈடுபட்டதால் மருத்துவமனையை சற்று அதிர்ந்து போனது. இதைத்தொடர்ந்து மருத்துவர்கள் இதுகுறித்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறஞ்சது சம்பவ இடத்திற்கு வரை இந்த காவல்துறையினர் அருண் கண்மணியை கைது செய்து அவர் மீது பல்வேறு வழக்குகளை பதிவு செய்தனர். முன்னதாக இது குறித்து போலீசார் கூறுகையில் குடிபோதையில் இருசக்கர வாகனத்தில் சென்ற காவலர் அருண் கண்மணி வேன் ஓட்டுனரிடம் தகராறு ஈடுபட்டதாகவும், விரைவில் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: ஆவேசமாக உள்ளே புகுந்த இன்ஸ்பெக்டர்..! பளிச் பளிச் என அறை..! கைது செய்யப்பட்ட சீமான் காவலர்..!