மகேந்திர சிங் தோனி, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், உலக அளவில் புகழ்பெற்ற விளையாட்டு வீரருமானவர், 2014ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் ரூ.100 கோடி மான நஷ்ட ஈடு கோரி ஒரு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு ஐ.பி.எல். சூதாட்ட புகார் தொடர்பாக தொலைக்காட்சி விவாதத்தில் தனது பெயருக்கு களங்கம் விளைவித்ததாகக் கூறி, ஐ.பி.எஸ் அதிகாரி சம்பத்குமார், இந்தி செய்தி தொலைக்காட்சி உள்ளிட்டோர் மீது தொடரப்பட்டது.
வழக்கின் விசாரணையில், நீதிமன்றம் பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், தோனி தரப்பில் எழுப்பப்பட்ட 17 கேள்விகளுக்கு பதிலளிக்குமாறு ஜீ மீடியாவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்தக் கேள்விகள் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு குறுக்கு விசாரணைக்காக எழுப்பப்பட்டவை என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

மேலும், தோனி போன்ற சர்வதேச அளவில் புகழ்பெற்ற நபருக்கு எதிராக குற்றச்சாட்டுகளை வெளியிடும்போது ஊடகங்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று நீதிமன்றம் அறிவுறுத்தியது. ஜீ மீடியாவுக்கு 10 நாட்களுக்குள் பதிலளிக்க உத்தரவிடப்பட்டது. தொடர்ந்து வாழ்க்கை நிராகரிக்க கோரி தொடரப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில், வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, தோனியின் வாக்குமூலத்தை பதிவு செய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையும் படிங்க: மடகாஸ்கரில் வெடித்த Gen Z போராட்டம்..!! கொந்தளிப்பில் இளைஞர்கள்.. ஓட்டம் பிடித்த அதிபர்..!!
தோனி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், சாட்சி விசாரணையைத் தொடங்க வேண்டும் என்றும், அவர் முழு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. தோனி ஒரு பிரபலமானவர் என்பதால், நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானால் தேவையற்ற குழப்பங்கள் ஏற்படலாம் என்பதால், அவரது வாக்குமூலத்தை பதிவு செய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமிக்க வேண்டும் என்று கோரப்பட்டது. அக்டோபர் 20 முதல் டிசம்பர் 10 வரையிலான காலத்தில், அனைத்து தரப்பினரின் வசதிக்கு ஏற்ப ஒரு இடத்தைத் தேர்வு செய்து வாக்குமூலம் பதிவு செய்ய தோனி தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, தோனி தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சம்பத் குமார் தாக்கல் செய்த மனு செய்திருந்தார். அவரது மனுவை தனி நீதிபதி தள்ளுபடி செய்திருந்த நிலையில் மேல்முறையீடு செய்தார். ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமார் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: சீக்கிரம் போரை முடிங்க!! ரஷ்யாவுக்கு வார்னிங்! உக்ரைனுக்கு அமெரிக்கா கொடுக்கும் ராட்சஷன்!