தன்னை ஏழை பங்காளன் என காட்சிப்படுத்திக்கொள்ளும் தமிழ் திரையுலகின் நெம்பர் ஒன் ஹீரோவில் இருந்து தவெக தலைவராக புரோமோட் ஆன விஜய் வாரந்தோறும் சுற்றுப்பயணத்திற்காக செலவிடும் தொகை குறித்த தகவல் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் விஜய் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் மாவட்டந்தோறும் மக்களை சந்தித்து வருகிறார். கடந்த 13ம் தேதி திருச்சி, பெரம்பலூர், அரியலூரில் மக்களைச் சந்தித்த விஜய் கடந்த சனிக்கிழமை நாகைப்பட்டிணத்திலும், திருவாருரிலும் உரையாற்றினார். ஒவ்வொரு வாரமும் காலை சென்னையில் இருந்து தனது தனி விமானம் மூலம் சம்பந்தப்பட்ட மாவட்டம் அல்லது அதற்கு அருகே விமான நிலையம் மாவட்டத்திற்கு சென்றடைகிறார். அங்கிருந்து அவருடைய பிரச்சாரத்திற்கு என்றே தயார் செய்யப்பட்டுள்ள பிரத்யேக வாகனத்தில் கிளம்பி மக்களை சந்திக்க புறப்படுகிறார். இதற்கு ஒவ்வொருமுறையும் விஜய் எத்தனை லட்சங்களை செலவழிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் பயணம் செய்யும் சிறப்பு தனி விமானத்தின் கட்டணம் மட்டும் 17 லட்சம் ரூபாய் முதல் 25 லட்சம் ரூபாய் வரை இருக்குமாம். அந்த தனி விமானம் பெங்களூருவில் இருந்து வர வேண்டும். அங்கிருந்து இங்கு வந்து திரும்பவும் அங்கு செல்ல ஆகும் செலவு, பெங்களூருவில் புறப்பாட்டுக் கட்டணம், சென்னையில் தரையிறங்கும் கட்டணம், சென்னையில் இருந்து திருச்சிக்கு புறப்பாட்டுக் கட்டணம், திருச்சியில் தரையிறங்கும் கட்டணம், அங்கிருந்து புறப்பாட்டுக் கட்டணம் என ஒவ்வொரு கட்டணமும் சுமார் 2 லட்சம் ரூபாய் என வைத்துக்கொண்டால் கூட இந்த தனி விமானத்தில் ஒருமுறை பயணிக்க விஜய் 25 லட்சம் வரை செலவழிக்கிறார்.
இதையும் படிங்க: ரூட்டை மாற்றிய விஜய்… சேலத்துக்கு வரலையாம்… எந்த மாவட்டத்துக்கு போறார் தெரியுமா?
மேலும், அவர் பாதுகாப்புக்கு வரும் ஒய் பிரிவு படையினருக்கு அதன் கமான்டோக்களின் எண்ணிக்கை அடிப்படையில் குறைந்தது 15 லட்சம் ரூபாய் மாதம் தோறும் கட்டணம் செலுத்த வேண்டும். இது தவிர கேரவன் எனும் குளு குளு வாகனம், தங்கும் விடுதி, செல்லும் இடங்களில் கட்சி சார்பாக செய்யப்படும் செலவுகள் ஆகியவை தனி.
நடந்து முடிந்த இரண்டு மாநாடுகளுக்கும் சேர்த்து குறைந்தது 300 முதல் 500 கோடி ரூபாய் வரை செலவு செய்திருக்கிறார் விஜய். தேர்தலுக்கு முன்னதாகவே இதுவரை 700 முதல் ஆயிரம் கோடி ரூபாய் வரை செலவு ஆகியிருக்கலாம் எனக்கூறப்படுகிறது. சரி விஜய் தான் சினிமாவில் நடித்த காசை இப்படி கட்சிக்காக தண்ணியாய் செலவழிக்கிறாரே என விசாரித்தால், 2026ம் ஆண்டு தேர்தலுக்காக செலவு செய்ய மட்டும் விஜய்க்கு இலங்கையைச் சேர்ந்த ஒரு டீம் 2 ஆயிரம் கோடி ரூபாய் வரை நிதி ஒதுக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் அடுத்து வரும் 2029 நாடாளுமன்றத் தேர்தல், 2031 ல் வரும் சட்டமன்றத் தேர்தல் ஆகிய தேர்தலுக்கும் விஜய் தன்னோட பணத்தையே இப்படி ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவு செய்வாரா...? என்பது மிகப்பெரிய டவுட் தான் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
இதையும் படிங்க: அணில் போல… செல்லூர் ராஜு பேசுறது எங்கயோ இடிக்குதே!