தமிழகத்தில் போதைப்பொருள் பயன்பாடு ஒரு வளர்ந்து வரும் சமூகப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இது தனிமனித வாழ்க்கையையும், சமூக அமைப்பையும், பொருளாதாரத்தையும் பெரிதும் பாதிக்கிறது. குறிப்பாக, சிறுவர்கள் மற்றும் இளைஞர்களிடையே போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வருவது கவலையளிக்கும் விஷயமாக உள்ளது. போதைப்பொருள் பயன்பாடு உலகளாவிய பிரச்சினையாக இருந்தாலும், தமிழகத்தில் இது கடந்த சில ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. கஞ்சா, ஹெராயின், மெத்தம்பெட்டமைன், அபின், எல்.எஸ்.டி, மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் போன்றவை தமிழகத்தில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.

2019-ல் மத்திய சமூக நீதி மேம்பாட்டு அமைச்சகத்தின் தேசிய ஆய்வறிக்கையின்படி, இந்தியாவில் 16 கோடி பேர் மதுபானத்தையும், 3.1 கோடி பேர் கஞ்சாவையும், 2.3 கோடி பேர் ஓபியாட்களையும் பயன்படுத்துவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகமும் கணிசமான பங்கு வகிக்கிறது. தமிழகத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வருவது மிகப்பெரிய கவலையை ஏற்படுத்தியுள்ளது. கோவை, சென்னை, மதுரை, திருவண்ணாமலை போன்ற நகரங்களில் மாணவர்கள் மத்தியில் கஞ்சா, மெத்தம்பெட்டமைன், மற்றும் போதை மாத்திரைகளின் பயன்பாடு பதிவாகியுள்ளது.
இதையும் படிங்க: மாட்டிக்கினாரு ஒர்த்தரு.. நிகிதா மீது பாயும் நடவடிக்கை.. அமைச்சரின் புது ட்ரீட்மெண்ட்!

ஏற்கனவே, கொடுங்கையூரில் கல்லூரி மாணவர்கள் உட்பட 7 பேர் வீட்டில் ஆய்வகம் அமைத்து மெத்தம்பெட்டமைன் தயாரித்ததாக கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் அதே கொடுமையூர் பகுதியில் 19 வயது சிறுவன் போதை மாத்திரைகள் விற்பனை செய்து வந்ததை அறிந்த போலீசார் அவரை கைது செய்துள்ளனர். சென்னை கொடுங்கையூர் பகுதியில் சேர்ந்தவர் 19 வயது சிறுவன் குருமூர்த்தி. இவர் போதை மாத்திரைகள் வைத்திருந்ததாக போலீஸாரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரித்ததில், மும்பையில் உள்ள மருந்து நிறுவனத்திடம் இருந்து ஆன்லைன் மூலம் வலி நிவாரணி மாத்திரைகளை ஆர்டர் செய்து வாங்கி கொடுங்கையூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சில்லறை முறையில் விற்பனை செய்து வந்தது தெரிய வந்துள்ளது. குருமூர்த்தி இடம் இருந்து வழி நிவாரணி மாத்திரைகள் மற்றும் 19 சிரஞ்சிகளை போலீசார் பறிமுதல் செய்ததுடன் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இளம் தலைமுறையினர் போதைப்பொருள் பயன்படுத்துவது, போதைப் பொருட்கள் விற்பனை செய்வது உள்ளிட்ட விஷயங்களை ஈடுபடுவது மிகப்பெரிய சமூக சீர்கேடாக உருவெடுத்துள்ளது. இது போன்ற நடவடிக்கைகள் மேலும் நடைபெறாமல் இருக்க போலீசார் கண்காணிப்பை தீவிர படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: இளைஞர் அஜித் காவல் மரணம்.. ரூட்டை மாற்றிய நீதிபதி! திடீர் திருப்பம்..!