தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபான காலி பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் சுற்றுச்சூழல் பாதுகாப்பை முக்கிய நோக்கமாகக் கொண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு முக்கியமான முயற்சி. இத்திட்டம் முதன்முதலில் நீலகிரி மாவட்டத்தில் பரிசோதனை அடிப்படையில் தொடங்கப்பட்டது. அங்கு வனவிலங்குகள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகளை கருத்தில் கொண்டு காலி பாட்டில்களை வீசி எறியும் பழக்கத்தைத் தடுக்க இது அமல்படுத்தப்பட்டது.
பின்னர் இத்திட்டம் பெரம்பலூர், கோயம்புத்தூர், தர்மபுரி, தேனி உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு விரிவாக்கப்பட்டது. இத்திட்டத்தின் முக்கிய அம்சம் என்னவென்றால், டாஸ்மாக் கடைகளில் மதுபான பாட்டில் வாங்கும்போது அதன் அதிகபட்ச சில்லறை விலைக்கு மேலாக ஒரு பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. இது ஒரு திரும்பப்பெறக்கூடிய டெபாசிட் தொகையாகும். வாடிக்கையாளர்கள் காலி பாட்டிலை மீண்டும் அதே டாஸ்மாக் கடைக்கோ அல்லது சில இடங்களில் எந்த கடைக்கும் திரும்பக் கொடுத்தால் அந்த ரூ.10 திரும்ப வழங்கப்படுகிறது.
இதனால் பொதுவெளிகளில், சாலைகளில், நீர்நிலைகளில் காலி பாட்டில்கள் வீசப்படுவது குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்பாட்டில்கள் மறுசுழற்சி செய்யப்பட்டு மீண்டும் உற்பத்தியாளர்களிடம் சென்றடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. நாளை முதல் சென்னை மாவட்டத்தில் காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் அமல்படத்தப்பட உள்ளது என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: சீரழியும் தோட்டக்கலைத்துறை... உடனே நிறுத்துங்க...! சீமான் வலியுறுத்தல்...!
வாடிக்கையாளர்கள் மது அருந்திவிட்டு காலி மதுபாட்டில்களை பொது வெளியில் வீசுவதைத் தவிர்க்கும் பொருட்டு, அவற்றை மதுபானக் கடைகளிலேயே திரும்பப் பெறும் திட்டத்தின்படி, மதுபாட்டில்களை வாங்கும் போது மதுபாட்டில் ஒன்றுக்கு ரூ.10 கூடுதலாகப் பெற்று மது அருந்திவிட்டு காலி மதுபாட்டில்களைத் திரும்ப அதே மதுபான விற்பனைக் கடையில் ஒப்படைக்கும் போது ஏற்கனவே செலுத்திய ரூ.10 ஐ திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் நோக்கம், காலி மதுபாட்டில்களை பொது வெளியில் வீசி சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுப்பதாகும் என கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கணக்கு இடிக்குது..! ரூ.3000 பத்தாது... 8 ஆயிரம் குடுங்க.. பாஜக செய்தி தொடர்பாளர் வலியுறுத்தல்..!