அதிமுகவிலிருந்து விலகியவர்களை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வலியுறுத்தினார். ஏற்கனவே கட்சியை பலப்படுத்தும் விதமாக அவர்களை இணைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி அதனை புறக்கணித்து விட்டதாக குற்றம் சாட்டினார். ஜெயலலிதா இறந்த பிறகு சசிகலாவை பொதுச் செயலாளராக நியமித்ததாகவும், எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சராகியதாகவும் தெரிவித்திருந்தார்.
மறப்போம் மன்னிப்போம் என்பதைப் போல கட்சியிலிருந்து விலகியவர்களை அல்லது விலக்கப்பட்டவர்களை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என்றும் அப்போதுதான் திமுகவை அகற்றி நல்லாட்சி கொடுக்க முடியும் என்றும் தெரிவித்து இருந்தார். செங்கோட்டையன் கூறிய கருத்து வரவேற்கத்தக்கது என்று சசிகலா, ஓ பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்ற செங்கோட்டையனின் கருத்து தொடர்பாக ஆடிட்டர் குருமூர்த்தி பேசியுள்ளார். அப்போது, செங்கோட்டையன் மீது எந்த தவறும் இல்லை என்றும் அவரது குரல் கலகக்குரல் அல்ல எனவும் தெரிவித்தார். அனைவரும் ஒன்றிணைந்தால் கட்சிக்கு நல்லது என்பது எடப்பாடி பழனிச்சாமிக்கு தெரியும் என்றும் கூறினார்.
இதையும் படிங்க: பாஜக உறவாடி கெடுக்கும்! புரிஞ்சுக்கோங்க மக்கா... அதிமுகவுக்கு செல்வப் பெருந்தகை எச்சரிக்கை
ஆனால் எல்லோரும் ஒன்றிணைந்தால் தனக்கு நல்லதா என்று எடப்பாடி பழனிச்சாமி யோசிப்பதாக கூறினார். இதுதான் தனக்கும் அவருக்கும் இடையிலான கருத்து வேறுபாடு என்றும் தெரிவித்தார். தலைமையின் கருத்தை தாண்டி செங்கோட்டையன் பேசுகிறாரே என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், அனைவரும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையின் கீழ் ஒன்றிணைைய வேண்டும் என்றுதான் கூறுகிறாரே எனவும் அது எடப்பாடி பழனிச்சாமிக்கு பெருமை தானே எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: செங்கோட்டையன் உடம்பில் ஓடுவது அதிமுக ரத்தம்! சிக்னல் காட்டிய சசிகலா! மனம் திறந்த செங்கோட்டையன்...