பிரான்ஸ் அதிபராக உள்ள இமானுவேல் மேக்ரான் இந்தோனேஷியா,, சிங்கப்பூர், வியட்நாம் உள்ளிட்ட நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். வியட்நாம் தலைநகர் ஹனோய் விமான நிலையத்திற்கு தனது மனைவி பிரிஜிட்டியுடன் மேக்ரான் சென்றுள்ளார். அப்போது விமானத்தில் இருந்து இறங்குவதற்கு முன்னதாக அவரது மனைவி கன்னத்தில் அறைந்து தள்ளிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

விமானத்தின் கதவு திறந்த அடுத்த நொடியே மேக்ரான் முகத்தை சிவப்பு ஆடை அணிந்திருந்த ஒரு கை அடித்து தள்ளுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றன. அதைத்தொடர்ந்து அடுத்த சில நிமிடங்களில் அதே சிவப்பு ஆடையுடன் மேக்ரோன் மனைவி பிரிஜிட்டி வெளியே வரும் காட்சிகளும் இருந்தன.
இதையும் படிங்க: 20 அடி உயரத்துக்கு எழுந்த தண்ணீர்; அன்னூர் சாலையில் பரபரப்பு... போக்குவரத்து முடக்கம்!!

விமானத்தின் கதவு திறந்திருந்ததை பார்த்த மேக்ரான் கையை அசைத்து ஹாய் காட்டி சமாளித்துள்ளார் இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களை வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: மட்டன் குழம்பில் தேரை..! அசால்ட்டாக பதில்.. பிரபல ஹோட்டலுக்கு சீல் வைத்து அதிரடி!