கர்நாடகா மாநிலம் தேவனஹள்ளி விமான நிலையம் முதல் ஓசூர் வழியாக மீண்டும் பெங்களூரை இணைக்கும் வகையில் STRR எனப்படும் சேட்டிலைட் ரிங்ரோடு அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. ஓசூர் அருகே பேரண்டப்பள்ளி என்னுமிடத்தில் சாலை அமைக்கும் பணிகளுக்காக அங்குள்ள பாறைகளை உடைக்க நெடுஞ்சாலை துறையினர் பயங்கர வெடிகளை வைப்பதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இன்று மதியம் பாறைகளுக்கு வைக்கப்பட்ட வெடியால், பயங்கர சத்தத்துடன் வெளியேறி பறந்த கற்கள் மழைச்சாரலை போன்று 500 மீட்டர் தூரத்திற்கு பின்னால் விழுந்துள்ளன. வெடி வைக்கப்பட்ட இடத்தின் அருகே உள்ள கொத்தூர் என்னும் கிராமத்தில் உள்ள 10க்கும் மேற்ப்பட்ட வீடுகளின் மீது கற்கள் விழுந்ததில் வீட்டின் மேற்கூரைகள் உடைந்து வீட்டிற்குள்ளாக இருந்தவர்கள் 4 பேர் காயமடைந்து மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்..
இதனால் கோபமடைந்த கிராம பெண்கள் கற்கள் உடைக்கும் பகுதிக்கு சென்று பணிகளை நிறுத்தியதுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தர்ணா மேற்க்கொண்டனர்.. பின்னர் போலிசார், வருவாய்துறையினர் மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்
இதையும் படிங்க: பட்டுக்கு பதில் பாலியஸ்டர்... திருப்பதியில் ரூ.120 கோடிக்கு சால்வை மோசடி... மிகப்பெரிய ஊழல் அம்பலம்...!
STRR ரிங்ரோடு அமைக்க பயங்கர சத்தத்துடன் வெடி வைப்பதால் கற்கள் வீடுகள் மீது விழுவதாகவும், இதனால் ஏராளமான வீடுகள் விரிசலடைந்து காணப்படுகிறது என்றும் மதிய நேரம் என்பதால் வேலைக்கும், பிள்ளைகள் பள்ளிக்கும் சென்றுவிட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது என்றும் அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.
மேலும் பலமுறை இதுப்போன்ற சம்பவங்கள் நடந்தும் நிரந்தர தீர்வு ஏற்ப்படுத்தப்படவில்லை எனக்கூறிய மக்கள், தினந்தோறும் அச்சத்தில் வாழ்ந்து வருவதாக திகிலுடன் தெரிவித்துள்ளனர்.
கொத்தூர் பகுதிக்கு வந்த வருவாய்த்துறையினர், தேசிய நெடுஞ்சாலை நிர்வாகத்தினருடன் கிராம மக்கள் கோபத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் இதனால் கிராமத்தில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது
இதையும் படிங்க: துணை குடியரசுத் தலைவர் பங்கேற்பு! டிச. 29-ல் புதுச்சேரி பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா: முக்கிய அறிவிப்பு வெளியீடு!