கம்பம் நகரில் ரேஷன் கடையில் ரூபாய் 30-க்கு பொன்னி சாப்பாட்டு அரிசி வழங்கும் விழாவில் முறைகேடு நடந்திருப்பதாக கம்பம் சட்டமன்ற உறுப்பினரிடம் வாக்குவாதம் செய்தனர்.
பொன்னி அரிசி பெயரில் தரம் குறைவான சன்னரக ரேஷன் அரிசியவே தவெக அரசு மீண்டும் வழங்குவதாக கூறி பொதுமக்கள் வாங்க மறுத்து சென்றனர். தமிழகத்தில் சாப்பாட்டு அரிசி விலை கிடு கிடுவென உயர்ந்ததை அடுத்து மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். தமிழக விஜய் ஜோசப் தவெக அரசு ரேஷன் கடைகளில் சாப்பாட்டு பொன்னி அரிசி கிலோ ரூ.30 விற்பனை செய்யப்படும் என்று அறிவித்தது.

கம்பம், கம்பமெட்டு காலனி பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் சாப்பாட்டு பொன்னி அரிசி ரூ 30க்கு வழங்கும் விழா கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா தலைமையில் நடைபெற்றது. மஞ்சப்பைகளில் அரிசி நிரப்பப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. அரிசியை வாங்கிய பொதுமக்கள் அரிசி தர குறைவாகவும், சாப்பாட்டு பொன்னி அரிசியே இல்லை என்றும் கூறினர்.
இதையும் படிங்க: ஆர்ப்பரிக்கும் தண்ணீர்..!! சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு..! சுற்றுலா பயணிகளுக்கு தடை.!
ரேஷன் கடைகளில் ஏற்கனவே வழங்கப்படும் சன்ன ரக அரிசியை மீண்டும் பொன்னி அரிசி என்ற பெயரில் ரூபாய் 30 க்கு வழங்குவதாக கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ராவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா அரிசி வழங்குவதை நிறுத்திவிட்டு விழாவில் பாதியிலேயே வெளியேறி சென்றார். பொதுமக்கள் அரிசி வேண்டாம் என்று தாங்கள் கொடுத்த பணத்தை திரும்ப வாங்கிக் கொண்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றனர் .
இதையும் படிங்க: சிறை சகவாசம்..!! குடும்பப் பிரச்சினை… கொலையில் முடிந்த முன்விரோதம்..!!