தமிழக அரசுக்கு நீதிபதி சாரா மாறி கேள்வி.?, தமிழகத்தில் மாவட்ட வாரியாக நிலுவையில் உள்ள ஊழல் வழக்குகள் எத்தனை?ஊழல் வழக்குகளை விசாரணை செய்ய எத்தனை சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளது?, தற்போது எத்தனை மாவட்டத்தில் ஊழல் வழக்குகளை விசாரணை செய்ய சிறப்பு நீதிமன்றம் உள்ளது?
அதிக ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ள மாவட்டங்களில் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க, கூடுதல் பொறுப்பு நீதிபதிகள் நியமிக்க முன்மொழிவு ஏதேனும் உள்ளதா தமிழக உள்துறை செயலர் உள்ளிட்ட அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சார்ந்த சாகுல் அமீத் தாக்கல் செய்த மனுவில், நான் பொதுப்பணித்துறையில் அரசு ஊழியராக பணிபுரிந்து வந்தேன். அப்பொழுது 30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக என் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது துறை ரீதியான விசாரணையில் என் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை இந்நிலையில் லஞ்ச ஒழிப்புத் துறையின் பதிவு செய்த வழக்கு தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் நீண்ட நாட்களாக விசாரணை நிலுவையில் உள்ளது எனவே எனது வழக்கை விரைந்து நடத்தி முடிக்க விசாரணை நீதிமன்றத்திற்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார்.
இதையும் படிங்க: தமிழக மீனவர்கள் கைது! மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் விஜய் அவசர கடிதம்!
இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஆஜராகி லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குகள் பல வருடங்களாக நடத்தப்படுகிறது இதனால் அரசு பணியில் உள்ளவர்களின் பனிக்காலம் பாதிக்கப்படுகிறது மேலும் சம்பந்தப்பட்ட விசாரணை நீதிமன்றத்தில் மட்டும் 70-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது ஆகையால் தான் விரைவான விசாரணை கேட்கிறோம் என வாதிட்டார்.
இதனை பதிவு செய்த நீதிபதி ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 4(4)-இல் உள்ள அதிகார படி மாநிலம் முழுவதும் இந்தப் பிரச்சினைகள் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்துவதால், இந்த நீதிமன்றம் தாமாகவே முன்வந்து, தமிழ்நாடு அரசின் உள்துறைச் செயலாளர், சென்னை அரசு வழக்குத் துறை இயக்குநர் மற்றும் சென்னை உயர் நீதிமன்றப் பதிவாளர் ஜெனரல் ஆகியோரை இந்தக் குற்றவியல் வழக்கில் பிரதிவாதிகளாகச் சேர்க்கிறது.
இவர்கள் அ) ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் மாவட்ட வாரியாக நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை, (ஆ) ஊழல் சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றங்களின் எண்ணிக்கை எத்தனை அவை எந்த எந்த மாவட்டங்கள் உள்ளது.
(இ) அந்த மாவட்டத்தில் அத்தகைய சிறப்பு நீதிமன்றங்களை அமைப்பதற்குப் பின்பற்றப்பட்ட அளவுகோல்கள் என்ன?, (ஈ) அதிகமான வழக்குகள் நிலுவையில் உள்ள மாவட்டங்களில் கூடுதல் சிறப்பு நீதிமன்றங்களை அமைப்பதற்கோ அல்லது கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதிகளை சிறப்பு நீதிபதிகளாக நியமிப்பதற்கோ ஏதேனும் முன்மொழிவு பரிசீலனையில் உள்ளதா என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்தி வைத்தார்.
இதையும் படிங்க: சி.எம்.விஜய் இதை அனுமதிக்கக்கூடாது... மீறினால்... தமிழக அரசுக்கு பி.ஆர்.பாண்டியன் எச்சரிக்கை...!