மதன் பாப், 1953 ஆம் ஆண்டு அக்டோபர் 19 அன்று சென்னையில் பிறந்தவர். இவரது இயற்பெயர் கிருஷ்ணமூர்த்தி. தனது திரை வாழ்க்கையை இசையமைப்பாளராகத் தொடங்கிய மதன் பாப், பின்னர் நடிகராகவும், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும், நகைச்சுவை நடிகராகவும் புகழ்பெற்றார். இசையமைப்பாளர்களான எம்.எஸ். விஸ்வநாதன், ஏ.ஆர். ரஹ்மான் ஆகியோருடன் பணியாற்றியவர்.
மதன் பாப் மெல்லிசைக் குழு என்ற இசைக் குழுவை நிறுவி, பல இசை நிகழ்ச்சிகளை நடத்தியவர். இசையின் மீது கொண்ட ஆர்வத்தால், ஏ.ஆர். ரஹ்மான் இவரை தனது குருவாகக் கருதியதாகவும் கூறப்படுகிறது. 1984 ஆம் ஆண்டு பாலு மகேந்திராவின் நீங்கள் கேட்டவை திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான மதன் பாப், தனது தனித்துவமான சிரிப்பு, முகபாவனைகள் மற்றும் உடல் மொழியால் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தார்.
ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் 150 முதல் 600 வரை பல மொழிகளில் திரைப்படங்களில் நடித்தார். தேவர் மகன், சதி லீலாவதி, தெனாலி, குஷி, சிங்கம் 2 உள்ளிட்ட படங்களில் இவரது நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்கள் மிகவும் பாராட்டப்பட்டவை. அசத்தப் போவது யாரு என்ற நகைச்சுவை நிகழ்ச்சியில் நடுவராகவும் பணியாற்றி, மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.மதன் பாபின் தனித்துவமான சிரிப்பு, அவரது திக்குவாய்க் குறையை மறைப்பதற்காக உருவாக்கப்பட்ட ஒரு பாணியாக இருந்தாலும், அது அவரது அடையாளமாக மாறியது.
இதையும் படிங்க: அடேங்கப்பா… இது நம்ப லிஸ்டிலேயே இல்லையே! திமுகவுக்கு தாவும் ஜெயக்குமார்? அரசியலில் பரபரப்பு
மதன் பாப் சமீபகாலமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, சென்னையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும், சிகிச்சை பலனளிக்காத நிலையில் நேற்று மாலை 5 மணியளவில் அவர் காலமானார். சென்னை அடையாறில் உள்ள மதன் பாபின் இல்லத்தில் அவரது உடலுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேரில் சென்று மரியாதை செலுத்தினார்.

இந்த நிலையில், மதன்பாப் மறைவுக்கு மரியாதை செலுத்த ஏராளமான திரைப்பிரபலங்கள் வரவில்லை என கூறப்படுகிறது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தன்னுடைய சிரிப்பால் பிறரை சிரிக்க வைத்த குணச்சித்திர நடிகர் மதன்பாபு அவர்களின் மறைவு தமிழ் கலைத்துறைக்கான பேரிழப்பு என தெரிவித்தார்.
தமிழ் சினிமாவில் சிலர் உச்சபட்ச நடிகர்களாக உருவாகுவதற்கு மதன்பாபு போன்றவர்களின் உழைப்பும் ஒரு வகையில் காரணம் என்றும் தெரிவித்தார்.
சக கலைஞனின் மறைவிற்கு கூட வரமுடியாத அளவிற்கு மாபெரும் நடிகர்களின் மமதை தங்களது கண்களை மறைக்கிறதா என கடுமையாக சாடினார்.
இதையும் படிங்க: அடேங்கப்பா… இது நம்ப லிஸ்டிலேயே இல்லையே! திமுகவுக்கு தாவும் ஜெயக்குமார்? அரசியலில் பரபரப்பு