நாகை அருகே ரூ.100 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், சுகனின் கூட்டாளி ராஜ்குமாருக்கு மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர். சம்மன் அனுப்பப்பட்டுள்ள நிலையில், பிரதாபராமபுரத்தைச் சேர்ந்த ராஜ்குமார் தலைமறைவாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
37 கிலோ மெத்தம்பெட்டமைன் பறிமுதல்:
நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கண்ணி அருகே உள்ள பிரதாபராமபுரத்தில், இலங்கைக்குக் கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளை மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரகத்தின் திருச்சி மண்டல அதிகாரிகள் அக்டோபர் 16ஆம் தேதி பறிமுதல் செய்தனர். இந்த நடவடிக்கையில் மொத்தம் 137 கிலோ கிரிஸ்டல் மெத்தம்பெட்டமைன் கைப்பற்றப்பட்டதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன் சட்டவிரோதச் சந்தை மதிப்பு ரூ.100 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கடன் தேவை எவ்வாறு குறைந்தது?... பாயிண்ட்களை அடுக்கி தவெக அரசுக்கு செக் வைத்த தங்கம் தென்னரசு...!
தவெக நிர்வாகி உட்பட நான்கு பேர் கைது:
இந்த வழக்கில், தவெக முன்னாள் மாவட்டச் செயற்குழு உறுப்பினரும் வழக்கறிஞருமான பூபாலன், சுகன், அவரது கூட்டாளிகள் மணிகண்டன் மற்றும் சதீஷ்குமார் ஆகிய நான்கு பேரை அதிகாரிகள் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, நால்வரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அக்டோபர் 30ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சுகனின் கூட்டாளி ராஜ்குமாருக்கு சம்மன்:
இந்நிலையில், இந்தக் கடத்தல் வழக்கில் சுகனின் கூட்டாளியாகக் குறிப்பிடப்படும் பிரதாபராமபுரத்தைச் சேர்ந்த ராஜ்குமாருக்கு மத்திய வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர். ஆனால், சம்மன் அனுப்பப்பட்டுள்ள நிலையில் ராஜ்குமார் தலைமறைவாகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த வழக்கில் ராஜ்குமாருக்குத் தொடர்பு உள்ளதா, போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கையில் அவர் ஏதேனும் பங்கு வகித்தாரா என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. எனினும், ராஜ்குமாருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் மற்றும் அவருக்குச் சம்மன் அனுப்பப்பட்டதற்கான குறிப்பிட்ட காரணங்கள் குறித்து அதிகாரப்பூர்வமான விரிவான தகவல்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
இதையும் படிங்க: கோவை குண்டுவெடிப்பு குற்றவாளிகளுக்கு 60 நாள் பரோலா? தமிழக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!