2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. அனைத்து கட்சி தலைவர்களும் தங்களது தேர்தல் சுற்றுப்பயணங்களை தொடங்கி நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் நேற்று முதல் தனது தேர்தல் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். முதலில் திருச்சியில் தனது சுற்றுப்பயணத்தை தொடங்கிய விஜய் திமுக அரசையும் பாஜகவின் விமர்சித்து பேசி இருந்தார்.
அந்தந்த மாவட்டங்களில் உள்ள பிரச்சனைகள் தொடர்பாகவும் மக்கள் பிரச்சினைகள் தொடர்பாகவும் விஜய் உரையாற்றினார். இதையெல்லாம் ஒரு பக்கம் இருக்க விஜய் தனது அரசியல் வரலாற்றில் முதல் முறையாக தேர்தல் சுற்றுப்பயணத்தை தொடங்கி உள்ள நிலையில், வரலாற்றின் திருப்புமுனையாக அலைகடலென மக்கள் குவிந்தனர்.

வியந்து பார்க்கும் அளவிற்கு மக்கள் கூட்டம் கட்டுக்கடாமல் போனது. திருச்சியை தொடர்ந்து அரியலூரில் மக்கள் மத்தியில் விஜய் உரை நிகழ்த்தினார். விஜயை காணும் பூரிப்பில் குடும்பம் குடும்பமாக மக்கள் குவிந்தனர். விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அரியலூரை தொடர்ந்து பெரம்பலூரில் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள இருந்தார். ஆனால் பிரச்சார வாகனமே உள்ளே நுழைய முடியாத அளவுக்கு பெரம்பலூரை ஸ்தம்பித்து போகும் நிலையில் கூட்டம் கூடியது.
இதையும் படிங்க: திமுக வாக்குறுதி நிறைவேற்றலயா… விஜய் போட்ட பழி மக்கள்கிட்ட எடுபடுமா! பந்தாடிய மா.சு.
இந்த நிலையில், விஜய் பிரசாரத்தில் ஈடுபட்ட பகுதிக்கு அருகில் இருந்த அரசு பள்ளி மேற்கூரைகள் இடிந்துள்ளது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பே மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். விஜய்க்கு சரியான திட்டமிடல் இல்லை என்றும் பேசும்போதே மைக் ஆஃப் ஆகிவிட்டது எனவும் அமைச்சர் தெரிவித்தார். விஜய் பிரச்சாரத்திற்கு வருபவர்கள் என்ஜாய் பண்ணுங்கள், என்டர்டைன்மென்ட் பண்ணுங்கள்., ஆனால், மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்டவற்றை சேதப்படுத்தாதீர்கள் என்று கூறினார்.
இதையும் படிங்க: ஹப்பா… என்னா கூட்டம்! ஸ்தம்பித்த பெரம்பலூர்… சென்னைக்கே RETURN வந்த விஜய்