தொகுதி மறு வரையறை தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக எம்பிக்கள் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. தொகுதி மறு வரையறை விஷயத்தில் திமுக தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவது, இந்திய அரசியல் அமைப்பின் கூட்டாட்சி தத்துவத்தையும் தென்னிந்திய மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தையும் பாதுகாக்கும் ஒரு நீண்டகால போராட்டமாக வெளிப்படுகிறது.
இந்த எதிர்ப்பு 2026-ம் ஆண்டுக்குப் பிறகு நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தொகுதி மறு வரையறை செயல்முறையை மையமாகக் கொண்டது. மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகளை மறுசீரமைக்கும் இந்த நடவடிக்கை, மக்கள் தொகை கட்டுப்பாட்டில் வெற்றி பெற்ற தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களுக்கு பாதகமாக அமையும் என்று திமுக கருதுகிறது.

தொகுதி மறு வரையறை என்பது அரசியல் அமைப்புச் சட்டத்தின் படி, ஒவ்வொரு மக்கள் தொகை கணக்கெடுப்புக்குப் பிறகும் தொகுதிகளின் எல்லைகளையும் எண்ணிக்கையையும் மறுநிர்ணயம் செய்யும் செயலாகும். இதனை கடுமையாக திமுக எதிர்த்து வருகிறது.
இதையும் படிங்க: தொகுதி மறு வரையறை..! முதல்வர் தலைமையில் திமுக எம்பிக்கள் அவசர ஆலோசனை கூட்டம்..!!
இந்த நிலையில், மத்திய பாஜக அரசு கொண்டுவரும் தொகுதி வரையறையால் தமிழ்நாட்டுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து ஆலோசிக்க முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் தொடங்கியது. தொகுதி மறு வரையறை தொடர்பாக நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் நாளை தொடங்கும் நிலையில், திமுக எம்பிக்கள் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தி வருகிறார். காணொளி காட்சி வாயிலாக முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: ஸ்டாலினுக்கு பயம்... அதுக்கு தான் அந்த வீடியோ..! பூந்து விளாசிய EPS..!!