சாதிய படுகொலைகள் குறித்த உறுப்பினர்களின் பேச்சுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று பேரவையில் பதிலளித்து பேசினார். அப்போது, ஆணவ படுகொலைகளை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்தார். சாதியில்லை என்பதே தமிழனின் அடிப்படையாக இருந்தது என்றும் பெரியார், பாரதிதாசன் போன்றவர்கள் சீர்திருத்த சிந்தனைகளை விதைத்துள்ளனர் என்று கூறினார்.
சாதி மதத்துக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் தமிழ் மொழிக்கு கொடுக்கப்பட்டது என்றும் இடைக்காலத்தில் புகுந்தவர்களால் சாதி வேறுபாடு வந்தது என்று தெரிவித்தார். பெரியார், அம்பேத்கர் பிறந்த நாள்களில் உறுதிமொழி எடுக்கிறோம் என்றும் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று கூறிய வள்ளுவர் பிறந்த மண் என்று தெரிவித்தார். சமூக சீர்திருத்த ஆட்சியை நடத்தியவர் கலைஞர் கருணாநிதி என்றும் அனைவருக்கும் சம வாய்ப்பு, சம உரிமை உருவாக்கவே பல இயக்கங்கள் போராடி மாற்றம் கொண்டு வந்ததாகவும் தெரிவித்தார்.

அனைத்து சாதிகளையும் அர்ச்சகர் ஆக்கி இருக்கிறோம் என்றும் காலனி என்ற சொல் நீக்கம் குறித்து ஏற்கனவே அறிவித்துள்ளேன் என்றும் கூறினார். பள்ளி, கல்லூரி விடுதிகளில் இருக்கும் சாதி பெயரை நீக்கி இருக்கிறோம் என்றும் அதனை சமூக நீதி விடுதியாக மாற்றி உள்ளோம் எனவும் சமூக நீதி, சமத்துவம், சகோதரத்துவம், பொதுவுடமை, பொது உரிமை, கல்வி உரிமை, அதிகாரம் தான் வேற்றுமையை விரட்டும் என்றும் கூறினார்.
இதையும் படிங்க: பாவ்லா காட்டுறீங்களா? கல்லா கட்டுறீங்களா?... ஆம்னி கட்டணம் குறித்து விளாசிய நயினார்...!
ஆணவ படுகொலைக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தமிழகத்தில் நடந்த சில சம்பவங்கள் வேதனை அளிப்பதாகவும், சட்டம் தன் கடமையை செய்து வருகிறது என்றும் தெரிவித்தார். சாதிய படுகொலையை தடுக்க ஓய்வு பெற்ற நீதிபதி கே.ஆர். பாஷா தலைமையில் ஆணையம் அமைக்கப்படும் என்றும் பரிந்துரையின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார். சாதிய பெயரில் இருந்த 'ன்' விகுதியை 'ர்' விகுதியாக மாற்றி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் எந்த காரணத்திற்காகவும் ஒரு உயிரைக் கொள்வது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: பிரதமரே உரிமையை மீட்டு தாங்க... கச்சத்தீவு மீட்பு நடவடிக்கை குறித்து முதல்வர் ஸ்டாலின் கடிதம்...!