தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் மிக முக்கியமான ஒரு நிகழ்வாக அமையவிருக்கிறது. இந்தத் தேர்தலில் அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் பாரதிய ஜனதா கட்சி இடையே மீண்டும் உருவாகியுள்ள இந்தக் கூட்டணி, 2023 செப்டம்பரில் முறிந்த உறவை மீண்டும் புதுப்பித்து, தமிழ்நாட்டில் ஆளும் திமுகவை எதிர்கொள்ளும் முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.
அதிமுகவும் பாஜகவும் கடந்த காலங்களில் பல தேர்தல்களில் கூட்டணி அமைத்து போட்டியிட்டுள்ளன. 1998 மற்றும் 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல்களிலும், 2021 சட்டமன்றத் தேர்தலிலும் இவ்விரு கட்சிகளும் இணைந்து போட்டியிட்டன.
ஆனால், 2023 செப்டம்பரில், தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, அதிமுகவின் மறைந்த தலைவர்களான ஜெயலலிதா மற்றும் அண்ணாதுரை ஆகியோரை விமர்சித்ததாகக் கூறி, அதிமுக இந்தக் கூட்டணியை முறித்துக் கொண்டது.
இதையும் படிங்க: அடிதூள்...!! மரம் ஏறும் தொழிலாளர்களுக்கு காப்பீடு; விவசாய கடன்கள் ரத்து - அதிரடி திட்டங்களை அறிவித்த இபிஎஸ்...!
இதனால், 2024 மக்களவைத் தேர்தலில் இரு கட்சிகளும் தனித்தனியாகப் போட்டியிட்டு, திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியிடம் படுதோல்வியைச் சந்தித்தன.

இந்த நிலையில், மீண்டும் 2026 சட்டமன்ற தேர்தலில் பாஜக அதிமுக கூட்டணி அமைத்து போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டது. தேர்தலுக்காக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். ஆட்சியை கைப்பற்றும் நோக்கத்தில் பல்வேறு பணிகள் நடைபெற்ற வருகிறது.
இந்த நிலையில் தமிழகத்தில் பாஜக இந்த முறை ஆழமாக கால் ஊன்ற வேண்டும் என்ற நோக்கத்தில் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆலோசனைக் கூட்டங்கள், நடைபயணம் உள்ளிட்டவைகளை பாஜக சார்பில் நடத்தவும் திட்டமிடுகின்றன. இந்த நிலையில் 2026 சட்டமன்றத் தேர்தலை ஒட்டி தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கட்சி நிர்வாகிகளுடன் இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.
பூத் கமிட்டிகளை வலுப்படுத்துவது, பாஜகவை மக்களிடம் கொண்டு சேர்ப்பது என பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக நயினாகேந்திரன் இன்று ஆலோசனை நடத்துகிறார். சென்னை டி நகரில் உள்ள கமலாலயத்தில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
இதையும் படிங்க: அதிமுக கூட்டணியில் தேமுதிக...முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி முக்கிய அறிவிப்பு