கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே புதுக்குளம் கிராமத்தைச் சேர்ந்த ராமர் இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி செல்லம் வயது 50 இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர் சிலம்பரசன், சிற்றரசன் இரண்டு பேருக்கும் திருமணம் முடிந்து மருமகள் திட்டக்குடியில் தனித்தனியாக வீடு எடுத்து வசித்து வருகின்றனர்.
இரண்டு மகன்களும் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகின்றனர் இந்த நிலையில் செல்லம் வீட்டில் தனியாக வசித்து வருகிறார் இவர் தனது வயலில் பயிர் செய்து வருகிறார். இந்த நிலையில் அவரது இளைய மகன் சிற்றரசன் மனைவிக்கு கடந்த இரண்டு மாதம் முன்பு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்று சிற்றரசனும் மீண்டும் வெளிநாடு சென்ற நிலையில்ம் செல்லம் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
இந்நிலையில் செல்லம் இன்று மதியம் தனது வயலில் வேப்பங்கொட்டை பொறுக்குவதற்காக சென்றுள்ளார். அவரது வயல் அருகே ராமர் என்பவரின் வயல் உள்ளது. அப்பொழுது செல்லம் அரை குறை ஆடையில் எந்த ஒரு அசைவும் இல்லாமல் கிடந்துள்ளார். பின்னர் இது குறித்து அவர் திட்டக்குடி காவல் நிலையத்தில் தகவல் கொடுத்தார். அதன் பேரில் திட்டக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்து போன செல்லம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .
இதையும் படிங்க: கவினின் உடலை பெற்றுக் கொள்ளும் பெற்றோர்... நெல்லை மருத்துவமனையில் போலீசார் குவிப்பு
திட்டக்குடி போலீசார் முதற்கட்ட விசாரணையில் செல்லம் தனது வயலில் மதியம் வேப்பங்கொட்டை பொறுக்கிக்கொண்டிருந்த மூதாட்டியை, யாரோ மர்ம நபர்கள் அவரை தலையில் தாக்கி கழுத்தில் குத்தி கொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் அணிந்திருந்த தாலி சரடு, மூக்குத்தி, காதில் அணிந்திருந்த தோடு ஆகியவற்றை கொள்ளை அடித்துச் சென்று தப்பி ஓடியதை கண்டறிந்தனர். செல்லம் ஆடைகள் கலைந்து அலங்கோலமான நிலையில் சடலமாக கிடந்ததால் பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: பட்டப்பகலில் அட்டூழியம் ... இளைஞர் ஓட, ஓட வெட்டிக் கொலை ... நடந்தது என்ன?