தமிழகத்தில் மருத்துவத் துறையில் முன்னேற்றங்கள் இருந்தாலும், பல் மருத்துவர்களின் எண்ணிக்கை தேவையை ஒப்பிடும்போது போதுமானதாக இல்லை. குறிப்பாக, கிராமப்புறங்களில் இந்த பற்றாக்குறை மிகவும் தீவிரமாக உள்ளது.
அரசு மருத்துவமனைகளில் பல் மருத்துவர்களின் காலிப் பணியிடங்கள் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ளதாக கூறப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் பல் மருத்துவர்களுக்கான பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பது முக்கிய காரணம். பணியிடங்களை நிரப்புவதற்கு அரசு தாமதப்படுத்துவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இதையும் படிங்க: என்மேல தப்பு இல்லங்க... மறுக்கும் நயினார்! ஆதாரத்தை காட்டிய ஓபிஎஸ்.
அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பல் மருத்துவரே இல்லாத அவல நிலையை தி.மு.க. அரசு உருவாக்கியிருப்பதாக ஓ. பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
காலிப் பணியிடங்களை நிரப்பும் வகையில், அவ்வப்போது தேர்வினை நடத்தி பல் மருத்துவர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்காதது தி.மு.க. அரசின் தவறு என்றும் தி.மு.க. அரசு செய்த தவறுக்கு பல் மருத்துவர்களை தண்டிப்பது நியாயமற்ற செயல் எனவும் சாடினார்.

பல் மருத்துவமனைகளை நாடி வரும் மக்களின் தேவை அதிகரித்துக் கொண்டே வருவதைக் கருத்தில் கொண்டு, நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய மருத்துவர் பணியிடங்களை உருவாக்கவும், காலிப் பணியிடங்களை அவ்வப்போது நிரப்பவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அரசு பல் மருத்துவர்களின் எதிர்பார்ப்பு என்றும் ஓபிஎஸ் கூறினார்.
இந்த விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் உடனடியாக கவனம் செலுத்தி, பல் மருத்துவர்கள் காலி பணியிடங்களை நிரப்பவும், பல் மருத்துவர்களுக்கான பதவி உயர்வு அளிக்கவும் இப்படிக்கு எடுக்க வேண்டுமென வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: NDA கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் வெளியேறியதால் வருத்தம்... டிடிவி தினகரன் பேட்டி