முதலாம் இராஜேந்திர சோழனின் 1000-வது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. தென்கிழக்கு ஆசியாவில் அவரது கடல்சார் பயணத்தின் ஆயிரமாவது ஆண்டு, மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலின் கட்டுமானத் தொடக்கத்தை நினைவுகூரும் வகையில், மத்திய கலாச்சார அமைச்சகத்தின் ஆதரவுடன் ஜூலை 23 முதல் இன்று வரை ஆடி திருவாதிரை விழா ஐந்து நாள் கொண்டாட்டமாக நடைபெறுகிறது. இதன் நிறைவு நிகழ்ச்சி இன்று நடைபெறும் நிலையில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். திருச்சியில் நட்சத்திர விடுதியில் இருந்து பிரதமர் மோடி கங்கைகொண்ட சோழபுரத்துக்கு புறப்பட்டார்.
பிரதமர் மோடி விடுதியில் இருந்து ரோடு ஷோவாக மக்களை பார்த்து கையசைத்தபடி சென்றார். அப்போது சாலையில் பா.ஜ.க.வினர்., அ.தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் மற்றும் பொதுமக்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனை அடுத்து, திருச்சியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் சென்றடைந்தார்.

கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவில் பிரதமர் மோடி வழிபட்டார் பிரகதீஸ்வரர் கோவில் மண்டபங்கள் மற்றும் சிற்பங்களை பார்வையிட்டார். தொடர்ந்து கங்கைகொண்ட சோழபுரம் கோவிலின் வெளிப்புறத்தில் அமைக்கப்பட்டுள்ள புகைப்பட கண்காட்சியையும் பிரதமர் மோடி பார்வையிட்டார். சோழர் கால சிற்பங்கள் சோழர்களின் படை வலிமை நாணயங்கள் ஆகியவற்றையும் பார்வையிட்டார்.
இதையும் படிங்க: பிரதமர் மோடி பாராட்டிய தமிழர்!! நாடே திரும்பி பார்க்கும் சாதனை.. மனதின் குரலால் வெளிவந்த உண்மை!!
மேலும் மாமன்னன் ராஜேந்திர சோழனின் வலிமையை பறைசாற்றும் செப்பேடுகளை பார்வையிட்டதுடன் பிரகதீஸ்வரர் ஆலயத்தில் உள்ள சுவாமிக்கு தனது தொகுதியான வாரணாசியில் இருந்து கொண்டுவரப்பட்ட கங்கை நீரால் பிரதமர் அபிஷேகம் செய்தார். பிறகு பெருவுடையாருக்கு ஆரத்தி காண்பித்து வழிபட்டார். பிரதமர் மோடிக்கு கோவில் நிர்வாகத்தினர் பூரண கும்பம் மரியாதை அளித்தனர்.
இதையும் படிங்க: அவர போல வருமா? அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத தலைவர்! கலைஞருக்கு புகழ் மகுடம் சூட்டி அன்பில் மகேஷ்