அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக வலுப்பெற்றது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ரெட் அலெர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக நீலகிரியில் உள்ள சுற்றுலாத்தலங்கள் பாதுகாப்பு கருதி மூடப்பட்டத்துடன் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் தமிழகத்தில் 11 மாவட்டங்களில் பிற்பகல் ஒரு மணி வரை மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: ஆட்டம் ஆரம்பம்.. அடிச்சு தூக்க போகுது மழை..! கோவை, நீலகிரிக்கு ஆரஞ்சு அலர்ட்..!

தென்காசி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, ஈரோடு, நீலகிரி, குமரி, விருதுநகர், நெல்லை, மதுரை ஆகிய மாவட்டங்களில் பிற்பகல் ஒரு மணி வரை மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: மக்களை காப்பது அரசின் கடமை... அதிகாரிகளுக்கு முதல்வர் போட்ட கண்டிஷன்ஸ்!