அரபிக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடலூர், அரியலூர், கிருஷ்ணகிரி, நீலகிரி, கோவை, திருப்பூர், கரூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, குமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: கோடை வெயிலில் கூலான அப்டேட்.. அடுத்த 2 மணி நேரத்தில் கொட்டப்போகும் மழை; எங்கு தெரியுமா?

இந்த நிலையில், சென்னை, காட்டுப்பள்ளி, எண்ணூர், கடலூர், நாகை உள்ளிட்ட இடங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும் பாம்பன், தூத்துக்குடி, புதுச்சேரி, காரைக்காலிலும் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அக்னி நட்சத்திரம் ஆஃப்.. இடி, மழையுடன் கொட்ட காத்திருக்கும் மழை.. வானிலை மையம் ஜில் அப்டேட்..!