தமிழகம் முழுவதும் உள்ள வட்டாரப் போக்குவரத்து மற்றும் மோட்டார் ஆய்வாளர் அலுவலகங்கள், இடைத்தளர்களாக செயல்படும் ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள் ஆகிய
என 40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டு கணக்கில் வராத பணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேலைக்கும் ஒரு ரேட் என லஞ்சம் நிர்ணயிக்கப்பட்டு அதிகாரிகளின் ஒத்துழைப்போடு புரோக்கர்களால் வசூலிக்கப்படுகிறது.
தவெக ஆட்சி பொறுப்பெடுத்த பின்ப தொடர்ந்து நடைபெற்று வருகிறது, இதுவரை அந்த நடைமுறையை மாற்ற முடியவில்லை. இப்போது தவெக ஆட்சியிலும் தொடர்ந்து இந்த லஞ்ச வேட்டை நடைபெற்று வருகிறது .
இதையும் படிங்க: தமிழக முழுவதும் மாஸ் ரெய்டு... ஆர்.டி.ஓ. அலுவலகங்களுக்குள் அதிரடியாய் நுழைந்த லஞ்ச ஒழிப்புத்துறை... சிக்கியது என்ன?
தமிழகம் எங்கும் உள்ள வெவ்வேறு பகுதிகளில் 45 வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் நடத்தப்படும் இந்த சோதனைகளில் ஏராளமான அலுவலர்கள், ஊழியர்கள், கணக்கில் வராத பணத்துடன் பிடிபட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இந்த நிலையில் இன்று நீலகிரி மாவட்டத்திலுள்ள கூடலூர் மாக்கமூலா பகுதியில் உள்ள போக்குவரத்து துறை பகுதி அலுவலகத்தில், டி.எஸ்.பி., ஜெயக்குமார் தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது வெகு நேரம் சோதனைக்கு பின்பு கணக்கில் வராத 1,03,590 லஞ்ச பணம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றப்பட்டது.

இதேபோல், சிதம்பரம் அருகே உள்ள சி.முட்லூரில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் உள்ளது. இங்கு கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சுந்தர்ராஜன் மற்றும் அன்பழகன் தலைமையில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இன்று திடீரென அதிரடி சோதனை நடத்தினர். அலுவலகத்திற்குள் அதிரடியாக உள்ளே நுழைந்து கதவை சாத்திக் கொண்ட ஒரு குழுவினர், அங்கிருந்தவர்களிடம் எதற்காக வந்தீர்கள்? கையில் எவ்வளவு பணம் உள்ளது என்பன போன்ற கேள்விகளை கேட்டு விசாரணை நடத்தினர்.
மேலும் வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில் இருந்த புரோக்கர்களையும் உள்ளே அழைத்துச் சென்ற லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், அவர்களிடம் பணம் உள்ளதா என்பது குறித்தும், பணம் வைத்திருந்தால் எதற்காக பணம் கொண்டுவரப்பட்டது என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தினர்.
மேலும் சி.முட்லூர், சிதம்பரம் வண்டிகேட், கீழவீதி ஆகிய இடங்களில் இயங்கி வரும் 3 ஓட்டுனர் பயிற்சி பள்ளிகளிலும் சோதனை நடத்தப்பட்டது. நேற்று காலை துவங்கி இரவு வரை சுமார் 8 மணி நேரம் இந்த சோதனை நடைபெற்றது
சோதனையின் முடிவில் ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளில் இருந்து கணக்கில் வராத சுமார் ரூ. 1.50 லட்சம் மற்றும் 3 புரோக்கர்களிடமிருந்து ரூ. 30 ஆயிரம் என மொத்தம் சுமார் ரூ. 1.87 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி ஹேமசித்ரா தலைமையிலான போலீஸார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அதில் 6 இடைத்தரகர்களிடமிருந்து கணக்கில் வராத 29 பறிமுதல் பணத்தை பறிமுதல் செய்தனர்.
பரமக்குடி (ஆர்டிஓ) வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கணக்கில் வராத ரூபாய் ஒரு லட்சத்து 92 ஆயிரம் பறிமுதல் செய்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: தவெக ஆட்சியில் தலைவிரித்தாடுகிறதா லஞ்சம்?...சார் பதிவாளர் அலுவலகங்களில் கட்டுக்கட்டாய் சிக்கிய பணம்... எவ்வளவு தெரியுமா?