செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அணு சக்தி துறை மைய வளாகத்தில் சென்னை அணுமின் நிலையம் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம், பாபா அணு ஆராய்ச்சி மையம் என இயங்கி வருகிறது. இதில் இந்திய அணுமின் கழகம் நிர்வகிக்கும் சென்னை அணுமின் நிலையத்தில் தலா 220 மெகாவாட் மின் உற்பத்தி செய்யூம் இரு அலகுகள் மின் உற்பத்தி செய்து வந்தன.
இந்நிலையில் முதல் அலகில் தொழில்நுட்ப கோளாறு ஏற்ப்பட்டு கடந்த 8 ஆண்டுகள் கடந்தும் தொழில்நுட்ப கோளாறு செய்ய படாததால் மின்உற்பத்தி செய்யபடாத நிலை உள்ளது. இதனால் முதல் அலகில் மூலம் கிடைத்த 220 மெகாவாட் பாதிக்கப்பட்டது. இதையடுத்து 2ஆம் அலகு வழக்கம் போல் 220 மெகாவாட் மின் உற்பத்தி செய்து வந்தது.
இந்நிலையில் 2-ஆம் அலகில் பராமரிப்பு பணிகளுக்காக இன்று அதிகாலை மின் உற்ப்பத்தி நிறுத்தப்பட்டது.இது குறித்து அணுமின் நிலைய வட்டாரங்கள் குறிப்பிடுகையில் பராமரிப்பு பணிகள் முடிவடைந்து 2 ஆம் அலகில் மின்உற்ப்பத்தி விரைவில் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கண்ணிமைக்கும் நேரத்தில் கோர விபத்து; அப்பளம் போல் நொறுங்கிய கார் - மூவர் பலி...!
இதையும் படிங்க: “உங்க குடும்பத்துல ஒருத்தனா சொல்லுறேன்”- ஜெர்மனி வாழ் தமிழர்களுக்கு உரிமையோடு அழைப்பு விடுத்த ஸ்டாலின்..!