பாட்டாளி மக்கள் கட்சி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் செயல்படும் ஒரு முக்கிய அரசியல் கட்சி. இது 1989ஆம் ஆண்டு ஜூலை 16ஆம் தேதி சென்னை மெரினா கடற்கரையில் மருத்துவர் எஸ். ராமதாஸ் அவர்களால் தொடங்கப்பட்டது. இந்தக் கட்சி முதன்மையாக வன்னியர் சமூகத்தின் முன்னேற்றத்திற்காக உருவாக்கப்பட்ட வன்னியர் சங்கத்தின் அரசியல் பிரிவாக மாறியது. 1980களில் வன்னியர் சமூகத்தின் உரிமைகளுக்காக உருவாக்கப்பட்ட வன்னியர் சங்கத்திலிருந்து 1989இல் பா.ம.க உருவானது. சமூக நீதி, சமத்துவம், மற்றும் வன்னியர் சமூகத்தின் உரிமைகளைப் பாதுகாப்பது, குறிப்பாக மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டைப் பெறுவது ஆகியவற்றை நோக்கமாக கொண்டு கட்சி உருவாக்கப்பட்டது.
பாட்டாளி மக்கள் கட்சியின் உதய நாளான இன்று, பாமக 37 ஆம் ஆண்டு விழா வெற்றிப் பயணத்தின் வேகத்தை அதிகரிக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறினார். மாபெரும் மக்கள் இயக்கமான பாட்டாளி மக்கள் கட்சி இந்த மண்ணில் உதித்த நாள் இன்று என தெரிவித்தார். சமூகநீதிக்காகவும், மக்கள் உரிமைகளுக்காகவும் போராடுவதில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு இணையான இன்னொரு இயக்கம் தமிழ்நாட்டில் இல்லை என்றார்.

தமிழ்நாட்டிற்கும், தமிழக மக்களுக்கும் வரும் ஆபத்துகளை அரணாக இருந்து காக்கும் இயக்கம் தான் பாட்டாளி மக்கள் கட்சி என பெருமிதம் தெரிவித்தார். தமிழ் மொழி, இனம், தமிழ்நாட்டு மக்கள், இயற்கை வளம், சுற்றுச்சூழல் ஆகியவை பாதுகாக்கபட வேண்டும் என்றால் பாட்டாளி மக்கள் கட்சி வலிமையுடன் பயணிக்க வேண்டும் என கூறிய அன்புமணி, தமிழ்நாடு இந்தியாவின் முதன்மை மாநிலமாக மட்டுமின்றி, உலகின் முன்னணி நாடுகளுடன் போட்டியிடும் அளவுக்கு உயர வேண்டும் என்றால் அதற்கு தமிழ்நாட்டை ஆளும் அரசில் பாட்டாளி மக்கள் கட்சியும் பங்கேற்க வேண்டும் என்றார். நமது உரிமையை வென்றெடுப்பதற்கான வெற்றிப் பயணத்தின் வேகத்தைக் கூட்ட நமது இயக்கம் ஐயா ராமதாசால் தோற்றுவிக்கப்பட்ட இந்த நாளில் நாம் அனைவரும் உறுதி ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் கூறினார்
இதையும் படிங்க: "HAPPY அண்ணாச்சி"... விரைவில் அன்புமணியோடு சந்திப்பு! குஷியில் பேசிய ராமதாஸ்..!
இதையும் படிங்க: எங்களுக்கு என்ன பயம்? ஒட்டுக் கேட்பு கருவி உண்மைனா வெச்சது யாருன்னு கண்டுபிடிங்க... அன்புமணி தரப்பு வலியுறுத்தல்!