வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி என்பது மிகவும் முக்கியமான ஒன்று. இறந்தவர்கள், மாற்று இடத்திற்கு சென்றவர்கள், புதியவர்கள் என பல்வேறு விஷயங்களை கருத்தில் கொண்டு பெயர் திருத்தம், முகவரி மாற்றம் என திருத்தப் பணிகள் நடைபெறுவது வழக்கம்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்கின்றன. காரணம் தேர்தல் ஆணையம் பாஜக அரசுக்கு துணையாக செயல்படுவதாகவும் வாக்காளர் திருத்த பணிகள் மூலம் பொதுமக்களின் வாக்குரிமை பறிக்கப்படும் என்ற குற்றம் சாட்டி வருகின்றனர். அது மட்டுமல்ல அது வாக்குத்திருட்டு நடைபெற்று இருப்பதாக மக்களவை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் பல்வேறு ஆதாரங்களை வெளியிட்டு பேசி வருகிறார். இருப்பினும் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் நிச்சயம் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி இரண்டாம் கட்டமாக 12 மாநிலங்களில் நடத்தப்பட உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்தார். தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெற்று வருகிறது. எஸ் ஐ ஆர் படிவங்கள் நிரப்புவதில் பல்வேறு சந்தேகங்கள் மக்களுக்கு எழுந்துள்ளது. என்னென்ன நிரப்ப வேண்டும், எப்படி நிரப்ப வேண்டும் உள்ளிட்டவை தொடர்பாக பல்வேறு குழப்பங்கள் நிலவி வருகின்றன. எஸ் ஐ ஆர் படிவத்தில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்ட வருகிறது.
இதையும் படிங்க: 2026-ல் விஜய் தான் முதலமைச்சர்..! செதற விடுவோம்… ஆதவ் அர்ஜுனா திட்டவட்டம்…!
போதுமான விளக்கம் கொடுக்கப்படாததால் படிவங்கள் நிரப்புவதில் மக்கள் சிரமத்தை சந்திக்கின்றனர். இதன் காரணமாக சென்னையில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் S.I.R உதவி மையங்கள் செயல்படத் தொடங்கியுள்ளன. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடந்து வரும் நிலையில், வாக்காளர்களுக்காக இன்று முதல் நவம்பர் 25 ஆம் தேதி வரை உதவி மையங்கள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. S.I.R படிவம் தொடர்பான வழிகாட்டுதல்களை காலை 10 -மாலை 6 மணி வரை உதவி மையங்களில் பெறலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சினிமா வட்டாரத்தில் பரபரப்பு... நடிகை ரம்யா கிருஷ்ணன் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்... தீவிர சோதனை...!