மருதுபாண்டியர்களின் 225வது நினைவு தினத்தை முன்னிட்டு அரசு சார்பில் சிறப்பு மரியாதை செலுத்தப்பட்டது. சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்வில் மருதுபாண்டியர்களின் சிலைக்கு மாலை அணிவித்து அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்வில் மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். சுதந்திரப் போராட்டத்தில் தங்களை அர்ப்பணித்துக்கொண்ட மருது சகோதரர்களின் தியாகத்தை நினைவுகூறும் வகையில் இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமைந்தது.
மாவட்ட மக்கள் பெருமளவில் கலந்துகொண்டு வீரர்களுக்கு மரியாதை செலுத்தினர்.தொடர்ந்து சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நிர்மல் குமார், சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்கள் குறித்து தெளிவுபடுத்தினார். முதலமைச்சர் பசும்பொன் செல்கிறார் என எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று அவர் தெரிவித்தார்.

சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், இதுகுறித்து மக்கள் குழப்பமடைய வேண்டாம் எனக் கூறினார். குடியரசுத் தலைவர் வருகைக்காக ஹெலிபேட் தயார் செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார். கூட்டம் அதிகமாகக் கூடும் என்பதால் முதலமைச்சர் பசும்பொன் செல்வது தொடர்பாக இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என அவர் உறுதியாகத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சிறை சகவாசம்..!! குடும்பப் பிரச்சினை… கொலையில் முடிந்த முன்விரோதம்..!!
மருதுபாண்டியர்களின் வீர வரலாற்றை நினைவுகூறும் இந்த நினைவு தின நிகழ்வுகள் மாவட்டத்தில் சிறப்பாக நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். அரசின் சார்பில் இத்தகைய நினைவு தினங்கள் தொடர்ந்து சிறப்பாக நடத்தப்படும் என்றும், வீரர்களின் வரலாறு இளைய தலைமுறையினருக்கு எடுத்துரைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இதையும் படிங்க: உச்சக்கட்ட பதற்றத்தில் சிவகங்கை... களத்தில் இறங்கிய சைபர் க்ரைம்... தென் மண்டல ஐ.ஜி. விடுத்த எச்சரிக்கை...!