4வது ஆசிய அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப் 2025, ஆகஸ்ட் 3 முதல் 12 வரை சென்னை மாமல்லபுரம் கடற்கரையில் நடைபெறுகிறது. ஆசிய சர்ஃபிங் கூட்டமைப்பு (ASF) மற்றும் இந்திய அலைச்சறுக்கு கூட்டமைப்பு (SFI) இணைந்து, தமிழ்நாடு அரசின் ஆதரவுடன் இந்தப் போட்டி நடத்தப்படுகிறது.
இந்தியா, ஜப்பான், சீனா, இலங்கை, மாலத்தீவு உள்ளிட்ட 20 நாடுகளைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இந்தியாவில் இருந்து 12 வீரர்கள், இதில் 8 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.
கிஷோர் குமார், ஸ்ரீகாந்த், கமலி மூர்த்தி, ஸ்ரீஸ்தி செல்வம், தயன் அருண், ஹரிஷ், பிரகலாத் ஸ்ரீராம், தமயந்தி ஸ்ரீராம் ஆகிய தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்களும் பங்கேற்றுள்ளனர்.
இதையும் படிங்க: காது கொடுத்து கேட்க மாட்டேங்கிறாங்க…தூய்மை பணியாளர்களுடன் நடந்த 7வது கட்ட பேச்சு வார்த்தையும் தோல்வி!
ஆண்கள் ஓபன், மகளிர் ஓபன், 18 வயதுக்குட்பட்ட ஆண்கள் மற்றும் மகளிர் பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகின்றன.

தமிழ்நாட்டைச் சேர்ந்த ரமேஷ் புத்திஹால் ஆண்கள் ஓபன் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று, ஆசிய அலைச்சறுக்கு சாம்பியன்ஷிப்பில் இந்தியருக்கு முதல் பதக்கத்தைப் பெற்றார்.
இந்தியாவின் ரமேஷ் புத்திஹால் இறுதிப்போட்டிக்கு முன்னேறி, ஆசிய சாம்பியன்ஷிப்பில் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார்.
ரமேஷ், கிஷோர் குமார், ஸ்ரீகாந்த், ஹரீஷ் ஆகிய நான்கு இந்தியர்கள் காலிறுதிக்கு முன்னேறினர். இது இந்தியாவுக்கு முதல் முறையாகும்.
இதையும் படிங்க: ரெட் கார்டு கொடுத்ததால ஓட்டு போட விடல... வாக்குரிமை பறிப்பு என நடிகை ரவீனா குற்றச்சாட்டு!