தமிழ்நாடு காவல்துறையில் காவல்துறைத் தலைவர் (ஐ.ஜி.) அந்தஸ்தில் உள்ள மூன்று மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளை அதிரடியாகப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. காவல்துறை நிர்வாகப் பணிகள் மேலும் துரிதமாகச் செயல்படும் வகையிலும், வழக்கமான சுழற்சி முறையிலும் இந்த இடமாறுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன்படி, காவல்துறைத் தலைவராகப் பணியாற்றி வரும் ரூபேஷ் குமார் மீனா ஐபிஎஸ், திருச்சி மாநகர காவல் ஆணையராகப் புதிய பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோன்று, சென்னை காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தின் நிர்வாகப் பிரிவு ஐ.ஜி.யாக என். காமினி ஐபிஎஸ் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும், தமிழ்நாடு குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்பிரிவு சிஐடி (CS-CID) ஐ.ஜி.யாக சந்தோஷ்குமார் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுப் புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அரசு அலுவலகங்களில் எத்தனை சாதிய வன்கொடுமை வழக்குகள்? உயர்நீதிமன்றம் கேள்வி!
தமிழ்நாடு அரசின் உள்துறை முதன்மைச் செயலாளர் பிறப்பித்துள்ள இந்த அதிகாரப்பூர்வ உத்தரவைத் தொடர்ந்து, பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள மூன்று மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட புதிய பொறுப்புகளை உடனடியாக ஏற்றுக்கொள்வார்கள் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: e-KYC செய்யாவிட்டாலும் பொருட்கள் வழங்குவது நிறுத்தப்படாது! தமிழ்நாடு அரசு அறிவிப்பு!