தமிழகத்தில் முதல்முறையாக மின்சார குளிர்சாதன பேருந்து இயக்கத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த மின்சார குளிர்சாதன பேருந்துகளின் சிறப்பு அம்சங்கள் என்ன? மின்சார குளிர்சாதன பேருந்து எப்படி இருக்கிறது? போன்ற தகவல்களை முழுமையாக பார்க்கலாம்.
தமிழகத்தில் முதல் முறையாக இன்று மின் சாதன பேருந்து வசதியை தமிழகத்தின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கிவைத்துள்ளார். இந்த மின்சார குளிர் சாதன பேருந்துகள் அனைத்துமே சிவப்பு நிறத்தில் உள்ளன. இந்த பேருந்துகளில் இரண்டு பக்கம் வழி இருக்கும். ஒருபுறம் மாற்றுத்திறனாளிகள் ஏறுவதற்கு வசதியாக தாழ்தளமாக அமைக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி பேருந்தில் பயணிப்பவர்களுக்காக கண்காணிப்பு கேமிரா, பாதுகாப்பாக செல்வதற்கு சீட்டு பெல்ட் மற்றும் மேலும் பயணிகளுக்கான பேருந்த நிறுத்த அறிவிப்பு செய்யும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. அதாவது பயணி ஒருவர் பெரும்பாக்கம் டு சோழிங்க நல்லூர் செல்கிறார் என்றால் அப்பகுதியில் பேருந்து நிற்கும் போது சோழிங்கநல்லூர் என ஒலிபெருக்கி மூலமாக பயணிகளுக்கு அறிவிக்கப்படும். மேலும் ரயிலில் அமர்ந்து செல்வது போல எதிர் எதிரே பயணிகள் அமரக்கூடிய வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: பெண் ஊழியர்களிடம் டபுள் மீனிங் பேச்சு... வேளாண் இணை இயக்குநருக்கு வச்சாச்சு ஆப்பு...!
அதேபோல் பேருந்துக்குள் செல்போன்களை சார்ஜ் செய்து கொள்ளும் வசதியும் உள்ளது. அதேபோல் அவசர காலத்திலோ அல்லது சக பயணிகளுக்கு ஏதாவது உடல் நலக்குறைபாடு என்றாலே உடனடியாக தெரிவிப்பது அலாரம் பட்டன் கொடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மாசம் ரூ.80,000 சம்பளம்... மத்திய அரசில் வேலை வாய்ப்பு...பொறியியல் பட்டதாரிகளுக்கு அடித்தது ஜாக்பாட்...!