தமிழ்நாடு, தமிழ் மண்ணையும் பாதுகாக்க வருகிற சட்டமன்ற தேர்தலில் நாம் வெற்றி பெற வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது நிகழ்த்தப்பட்ட ஒன்றுதான் என்றும் ஆனால் அதை மீறி அமித்ஷா, தமிழ்நாட்டில் வெற்றி பெறுவோம் என்று முழங்குகிறார். அவர் எப்படி சொல்கிறார் என்று நினைக்க வேண்டும் என தெரிவித்தார். பீகாரில் சொல்லி வச்சது போல் வெற்றி பெற்றனர் என்றும் கேரளாவில் மாநாகராட்சியை வெற்றி பெற்றுள்ளனர்.
அமித்ஷா எந்த அடிப்படையில் சொல்கிறார் எனவும் வாக்குச்சாவடி முகவர் இல்லை, கட்சி கட்டமைப்பு இல்லை., ஆனாலும் முழங்குகிறார். இது வாக்கு திருட்டு முறையில் வெற்றி பெற நினைக்கிறார் என்றும் கூறினார். ஆனால் நமக்கு ஒரு தைரியம் இருப்பதாக தெரிவித்த திருமாவளவன், திமுக அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கட்டமைப்பு வைத்துள்ளது என்றும் இந்தியாவில் எந்த கட்சியும் இந்த கட்டமைப்பில்லை., கடந்த தேர்தலில் முதல்வர் அவர்களின் சக்தி, சதிகளை முறியடித்தார். நாம் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

திருப்பரங்குன்றம் மமதையில் உள்ள சர்வே கல்லை வைத்து, நீதித்துறைய வளைத்து, காவல் துறை, அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு வரவழைத்துள்ளனர் என்றும் இதற்கெல்லாம் அச்சம் படாமல், துணிச்சலாக இருப்பவர் தான் முதல்வர் ஸ்டாலின் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தமிழகத்திலும் வெற்றி பெற பாஜக சதி... திருமா ஓபன் டாக்...!
இந்தியாவில் தமிழ்நாடு தனி நாடாக இருக்கிறது என்று ஒரு அமைச்சர் சொல்கிறார் என்றும் தமிழ்நாடு தனித்துவமானது என்பதற்கு பெரியாரின் கொள்கை என்பது தான்., தமிழ்நாட்டில் மீண்டும் நாம் கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்றும் கூறினார்.
இடது சாரி அரசியல் என்பது கம்யூனிஸ்ட் கட்சிக்களுக்கு மட்டுமில்லை என்ன தெரிவித்த அவர், அம்பேத்கரிய அரசியல் என்பது தலித்துகளுக்கு மட்டுமில்லை., நாம் எல்லோருக்குமானது தான் என பேசினார். நாம் எல்லோரும் ஒற்றுமையாக களமாடி தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்றார்.
இதையும் படிங்க: சதி கும்பல் வேலை செய்யுது..! நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் தானே பதவி விலகணும்... திருமா. வலியுறுத்தல்...!