வெளிமாநிலங்களில் இருந்து தடை செய்யப்பட்ட போதை பொருள்கள் திருச்செந்தூர் பகுதிக்கு சட்டவிரோதமாக காரில் கடத்தி வரப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகநேரி காவல் நிலைய சோதனை சாவடியில் திருச்செந்தூர் டிஎஸ்பி தலைமையிலான போலீசார் இன்று காலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது அதில் வெளிமாநிலங்களில் இருந்து தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பகுதியில் விற்பனை செய்வதற்காக கொண்டுவரப்பட்ட தடை செய்யப்பட்ட 400 கிலோ எடை கொண்ட போதைப் பொருள்கள் இருந்ததை கண்டுபிடித்தனர். அதன் மதிப்பு சுமார் 10 லட்சம்.

இதையடுத்து காரில் வந்த ஐந்து பேரையும் பிடித்து விசாரணை செய்த போலீசார் அவர்கள் திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கடைகளுக்கு இதனை விற்பனை செய்வதற்காக கொண்டு வரப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் ஐந்து பேரும் ஆறுமுகநேரி, உடன்குடி பகுதியை சேர்ந்த சாந்தகுமார், அரிகிருஷ்ணன், சங்கர், மகாலிங்கம், வசீகரன் என்பது தெரியவந்தது.
இதையும் படிங்க: BIKE- ல ஏறலனா அவ்ளோ தான்.! டியூஷன் போன சிறுமியை மிரட்டி பாலியல் தொல்லை... ஆசிரியர் போக்சோவில் கைது...!
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்செந்தூர் அருகே சட்டவிரோதமாக கடத்திவரப்பட்ட 10 லட்சம் மதிப்பிலான 400 கிலோ எடை கொண்ட போதைப் பொருட்கள் சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் பிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் வெற்றியா? அமித் ஷா முழக்கத்தில் சந்தேகத்தை கிளப்பிய திருமா…!