திருப்பூர் பிரிட்ஜ்வே காலனி பகுதியில் சுமார் 200கும் மேற்பட்ட லாரி புக்கிங் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் பனியன் உள்ளிட்ட பின்னலாடை பொருள்கள் என பல்வேறு பொருட்கள் இங்கிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு மாநிலங்களுக்கும் சரக்கு லாரிகள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது.
இதற்காக வரும் சரக்குகளை குடோன்களில் இருந்து லாரிகளில் ஏற்றவும் லாரிகளில் இருந்து குடோன்களில் இறக்கவும் சுமார் 300கும் மேற்பட்ட சுமைப்பணி தொழிலாளர்கள் பணியாற்றி வந்துள்ளனர். இவர்களுக்கு மாதம் தோறும் 20 முதல் 25 ஆயிரம் வரை ஊதியம் கிடைத்து வந்துள்ளது. இந்நிலையில் இங்கு செயல்பட்டு வரும் தனியாருக்கு சொந்தமான பார்சல் குடோனில் தமிழ் சுமைபணியாளர்களை நீக்கி வீட்டு சூரத்தில் இருந்து ஏழு வட மாநில தொழிலாளர்களை அழைப்பு வந்து பணியில் அமர்த்தி உள்ளார்.
இது குறித்து தமிழக சுமை பணியாளர்கள் கேள்வி எழுப்பிய போது முறையாக பதில் அளிக்கவில்லை இதனைத் தொடர்ந்து, சி ஐ டி யு , ஏ ஐ டி யு சி மற்றும் ஏடிபி தொழிற்சங்கத்தினர் தமிழகத் தொழிலாளர்களை பணியமர்த்த நிர்வாகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். நிர்வாக தரப்பு மற்றும் தொழிற்சங்கத்தினர் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து இவ்விவகாரம் தொடர்பாக நாளை பேச்சுவார்த்தை நடத்தி சமூகத் தீர்வு காண்பது எனவும், அதுவரையில் தொழிலாளர்கள் சரக்குகளை ஏற்றி இறக்கும் பணியில் ஈடுபட மாட்டார்கள் என தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: சசிகலா, ஓபிஎஸ், டிடிவியை அதிமுகவுக்குள் கொண்டு வர துடிதுடியாய் செங்கோட்டையன்... பின்னணியில் மறைந்திருக்கும் பகீர் காரணம்...!
குறைவான ஊதியம் வழங்கினால் போதும் என்பதற்காக வட மாநில தொழிலாளர்களை பணிக்கு அழைத்து வருகின்றனர். இதனால் தமிழக சுமை தூக்கும் பணியாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: #BREAKING: ஆமாம்... இதற்கு தான் அமித் ஷாவை சந்தித்தேன்! செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி