வெங்கடேஸ்வரா மருத்துவமனையில் 18 தொழிலாளர்களில் 8 பேர் வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பல்துறை மருத்துவர்கள் கொண்டு உயர்தர சிகிச்சை அளிக்கப்பட உள்ளது என மருத்துவமனை டீன் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே கன்னிகைப்பேர் கிராமத்தில் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிந்து ஏற்பட்ட விபத்தில் பாதிக்கப்பட்ட 18 தொழிலாளர்கள் செங்குன்றம் அருகே உள்ள வெங்கடேஸ்வரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் எட்டு தொழிலாளர்கள் வென்டிலேட்டர் பொருத்தப்பட்டு ஆக்சிஜன் உதவியுடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை டீன் சபிதா தெரிவித்துள்ளார்.
பத்து தொழிலாளர்கள் சாதாரண வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அமோனியா வாயு கசிவால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு மூச்சு குழாய், உணவுக் குழாயில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால் ஐவி முறையில் ட்ரிப்ஸ் செலுத்தப்பட்டு வருகிறது எனவும் அடுத்த இரண்டு நாட்களில் இவர்களின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க: #BREAKING விடிந்ததுமே பேரதிர்ச்சி... அமோனியா கசிவு விபத்தில் மேலும் 2 பெண்கள் உயிரிழப்பு... பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு...!
அம்மோனியா வாயு உள்ளே சென்றுள்ளதால் நுரையீரல் பிரச்சனை, சரும பிரச்சனை, கண்பார்வை கோளாறு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது எனவும் கூறினார். வெங்கடேஸ்வரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 18 பேரையும் அனைத்து துறை வல்லுனர்களைக் கொண்டு சிகிச்சை அளிக்கப்பட உள்ளது என்றும் நரம்பியல், தோல் சிகிச்சை நிபுணர், கண் சிகிச்சை நிபுணர், பிளாஸ்டிக் சர்ஜியன் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு மருத்துவ குழுவினர் கொண்டு பரிசோதிக்கப்பட உள்ளது என கூறினார். தொடர்ந்து அனைவரது உடல் நிலையும் கண்காணித்து வருவதாகவும் மருத்துவமனை டீன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சட்டப்போருக்கு தயாராகும் தமிழகம்..!! மேகதாதுவை தடுக்க புதிய நடுவர் மன்றமே தீர்வு..! தங்கம் தென்னரசு பேட்டி..!!