தமிழக முதல்வர் விஜய் பிரதமர் வேட்பாளர் என்று அமைச்சர்கள் கூறி வருகிறார்கள் இதுகுறித்த கேள்வி? 2026 இன் மிகப்பெரிய காமெடி ஜோக் அதுதான். கருத்துக் கணிப்பில் பிரதமர் லிஸ்ட்டில் 3வது இடத்தில் தமிழக முதல்வர் விஜய் உள்ளாரே என்ற கேள்வி? கருத்துக்கணிப்பு மீது எப்போதும் கருத்து சொல்வதில்லை.
வெள்ளையனை எதிர்த்த மாமன்னர் புலித்தேவன் பிறந்த நாள் இன்று1 கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், தென்காசி மாவட்டம், சங்கரன்கோயில் அருகே உள்ள நெல்கட்டும்செவலில் உள்ள திரு உருவ சிலைக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நாளை மாலை அணிவிக்க உள்ளார். இதற்காக இன்று சென்னையிலிருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வருகை தந்தார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்து கூறும்போது., அமுமுக கட்சியில் இருந்து 3700 பேர் அதிமுகவில் இணைந்துள்ளார்கள் இது குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு? தர்மபுரி மாவட்ட செயலாளர் பி.கே ராஜேந்திரன் தேர்தலில் தர்மபுரி தொகுதிக்கு கேட்டிருந்தார்.. கிடைக்கவில்லை என்ற வருத்தத்தில் அமமுகவில் இருந்து ஒதுங்கி இருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவட்ட செயலாளர் பதவிக்கு வேறு ஒருவரை நியமித்து உள்ளோம். அமுமுகவில் இருந்து என்னிடம் சொல்லிவிட்டு தான் விலகி இருந்தார். தற்போது அதிமுகவில் இணைந்து இருக்கின்றார்.
இதையும் படிங்க: களைகட்டிய சேலம்... முதல்வர் விஜயை வழிநெடுகிலும் ஆரவாரத்தோடு வரவேற்ற மக்கள்..!
சனிக்கிழமை சந்தையில் (தவெக) போய் சேர்ந்து கொண்டிருந்தார்கள் அல்லவா அந்த காலகட்டத்தில் சனிக்கிழமை சந்தைக்கு போகனும் என்று நினைத்தபோது அதிமுக கே.பி முனிசாமியும் டி.கே ராஜேந்திரனும் பழைய நண்பர்கள்.. ஆகவே அவரிடம் பேசி என்னிடம் இரண்டு மாதத்திற்கு முன்பு தெரியப்படுத்தி சனிக்கிழமை சந்தைக்கு போவதை தடுத்து நாங்கள் அதிமுகவில் அழைத்து இருக்கிறோம் என்று கேபி முனுசாமி கூறினார். இரண்டு மாதத்திற்கு முன்பு நடந்த நிகழ்வு அப்பவே சேர்ந்து விட்டார். என்னிடம் போனில் பேசி தெரியப்படுத்தி தான் சேர்ந்தார்.
ஆனால் சமூக வலைதளத்தில் அதிமுக, அமமுக கட்சியினரிடையே சண்டை சச்சரவு என்று கூறி வருகிறார்கள். எதுவும் இல்லை தேர்தல் வாய்ப்பு கிடைக்காத வருத்தத்தில் தேர்தல் சமயத்தில் இருந்து ஒதுங்கி இருந்தவர் அதற்கு பின்பு அதிமுகவில் இணைந்துள்ளார் அவ்வளவு தான்.
தமிழக முதல்வர் விஜய் வருங்கால பிரதமர் என்று அமைச்சர்கள் கூறி வருகிறார்கள் இதுகுறித்த கேள்விக்கு? 2026 இல் மிகப்பெரிய காமெடி ஜோக் அதுதான். இந்த ஆட்சி பற்றி சோசியல் மீடியாவில் தமிழக மக்கள் எப்படி எல்லாம் வருத்தப்பட்டு தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது தெரியும். தமிழ்நாட்டில் இன்ஸ்டா மூலம் ரீல்ஸ் போட்டுக்கொண்டு இளைஞர்களையும், பெண்களையும் ஏமாற்றி ஆட்சிக்கு வந்தவர்கள் ரீல்ஸ் வைத்து ஆட்சியை தொடர பார்க்கிறார்கள்.. இன்னும் சொல்லப் போனால் இந்திய மக்களை ஏமாற்றலாம் என்று பார்க்கின்றார்கள்.. உறுதியாக தமிழ்நாட்டு மக்கள் நல்ல தீர்ப்பை தருவார்கள்.
கருத்துக் கணிப்பில் 3வது இடத்தில் தமிழக முதல்வர் விஜய் பிரதமராக வருவார் என்று கூறப்பட்டுள்ளது குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு? கருத்துக் கணிப்பு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்களா? கருத்துக்கணிப்பு மீது எப்போதும் கருத்து சொல்வதில்லை. உங்கள் நேரம் எங்கள் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று நினைக்கின்றேன் என்றார்.
இதையும் படிங்க: அனல்மின் திட்ட அறிவிப்பு தேவையா.? தனியாருக்கு விற்க போறீங்களா.? முதல்வருக்கு அப்பாவு கேள்வி..!!