தமிழகத்திற்கு பிரதமர் மோடி வந்திருந்த போது அவரை சந்திக்க நேரம் கிடைக்காத நிலையில், தான் பலமுறை நயினார் நாகேந்திரனை அழைத்தேன்., ஆனால் அவர் கண்டு கொள்ளவில்லை என்று ஓ பன்னீர்செல்வம் குற்றம் சாட்டி இருந்தார். ஓபிஎஸ் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறுவதுதான் மரியாதையாக இருக்கும் என்று பேசப்பட்டு வந்த நிலையில் தான் கூட்டணியை முறித்துக் கொள்வதாக ஓ. பன்னீர்செல்வம் அறிவித்தார். அவரைத் தொடர்ந்து டிடிவி தினகரன் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார். இந்த நிலையில் நைனார் நாகேந்திரன் மீது பல குற்றச்சாட்டுகளை டிடிவி தினகரன் முன் வைத்தார்.
நயினார் நாகேந்திரன் கூட்டணியை சரியாக வழி நடத்தவில்லை என TTV தினகரன் குற்றம்சாட்டினார். நயினார் நாகேந்திரன் எடப்பாடி பழனிச்சாமியை, தூக்கிப் பிடித்ததால்தான் கூட்டணியை விட்டு வெளியேறியதாக தெரிவித்தார். எடப்பாடி பழனிச்சாமி தானாகவே முதல்வர் வேட்பாளர் என கூறிக் கொண்டிருப்பதாக தெரிவித்தார். இபிஎஸ் தான் முதலமைச்சர் வேட்பாளர் என அமித்ஷா எங்கேயுமே கூறவில்லை என்றார். கூட்டணியிலிருந்து வெளியேறும் பின்னணியில் அண்ணாமலை இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்தார். தன்னை சந்திக்கவே எடப்பாடி பழனிச்சாமி தயங்குவார் எனக் கூறினார்.

2021 இல் அதிமுக வெற்றி பெறாமல் இருந்ததற்கு என்ன காரணம் என அனைவருக்கும் தெரியும் எனக் கூறிய டிடிவி தினகரன், பேச தயார் என செய்தியாளர்களிடம் கூற வேண்டிய காரணம் என்ன என்றும், எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் வேட்பாளராக நான் ஏற்றுக் கொள்வேன் எனக் கூறியது இல்லை என்றும் தெரிவித்தார். ஓ பன்னீர்செல்வம் கூட்டணியை விட்டு வெளியேறியதற்கு நயினார் நாகேந்திரன் தான் காரணம் என்றும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
இதையும் படிங்க: தேவர் சமூகம்… அதான் TTVக்கு நயினாரை பிடிக்கல! புது குண்டைத் தூக்கிப் போட்ட காயத்ரி ரகுராம்
இந்த நிலையில், Ttv தினகரன் கூட்டணியில் இருந்து வெளியேற நான் காரணமில்லை என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். ஓ.பன்னீர்செல்வம் மற்றும் TTV தினகரன் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருக்கிறேன் என கூறினார். எப்போதும் TTV சார் என்று தான் கூப்பிடுவோம்.., அந்த மரியாதை எப்போதும் இருக்கும் என் பேசினார்.
இதையும் படிங்க: சிலிண்டருக்கு ரூ.100 மானியம்! சொன்னிங்களே செஞ்சீங்களா ஸ்டாலின்... நயினார் சரமாரி கேள்வி