தமிழக வெற்றி கழகத்தை கூட்டணியில் சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் எடப்பாடி பழனிச்சாமி அந்தக் கட்சிக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறார் என்ற விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதற்காக தமிழக வெற்றி கழகம் அதிமுகவோடு கூட்டணி வைக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. சமீபத்தில் எடப்பாடி பழனிச்சாமி மேற்கொண்ட சுற்றுப்பயணத்தை தமிழக வெற்றி கழகத்தின் கொடி பறந்தது பேசு பொருளாக மாறியது.
கூட்டணிக்கான பிள்ளையார் சுழி என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருந்தார். அதிமுக தமிழக வெற்றி கழக கூட்டணி சேர வேண்டும் என்பது தொண்டர்களின் விருப்பம் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர். பி உதயகுமார் தெரிவித்து இருந்தார். திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழக வெற்றி கழகத்தை ஆண்டவன் நினைத்தாலும் காப்பாற்ற முடியாது என்று அவர் எச்சரித்துள்ளார்.

ராட்சத பலம் வாய்ந்த திமுகவை வீழ்த்த அதிமுக கூட்டணியில் தமிழக வெற்றி கழகம் சேர வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார். அது மட்டுமல்லாது அதிமுகவின் முக்கிய உறுப்பினர்கள் சிலரும் தமிழக வெற்றி கழகத்திற்கு கூட்டணி அழைப்பு விடுப்பு வகையில் பேசி வருகின்றனர். இந்த நிலையில், அதிமுகவின் கூட்டணி அழைப்பை தமிழக வெற்றி கழகம் நிராகரித்துள்ளது.
இதையும் படிங்க: விஜய் தாமதத்திற்கு இதுதான் காரணம்! தவெக நிர்வாகிகள் ஓடிவிட்டார்களா? நிர்மல் குமார் பரபரப்பு பேட்டி...!
கூட்டணி விவகாரத்தில் தங்களது நிலைப்பாட்டில் மாற்றமில்லை என்று தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில துணைச் செயலாளர் நிர்மல் குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தங்களது தலைமையில் தான் கூட்டணி என்றும் விஜய் முதலமைச்சர் வேட்பாளர் என தொடர்ந்து கூறி வருகிறது தமிழக வெற்றி கழகம். இதனிடையே, ஒரு மாதத்திற்கு முன்பு என்ன நிலைப்பாடு இருந்ததோ அதுவே தொடர்வதாகவும், கூட்டணி நிலைப்பாட்டில் மாற்றமில்லை என்றும் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பணம் இருந்தால் தான் அரசு பதவியா? நகராட்சி நிர்வாகத்துறை ஊழலுக்கு தவெக கண்டனம்...!