தமிழக அரசியல் களம் எப்போதும் சுவாரஸ்யமான திருப்பங்களால் நிறைந்தது. 2026 சட்டமன்றத் தேர்தல் அந்தப் பாரம்பரியத்தை மீண்டும் உயிர்ப்பித்துள்ளது. நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் களத்தில் நுழைந்ததால், பாரம்பரிய திராவிடக் கட்சிகளான திமுக மற்றும் அதிமுக இடையிலான இருமுனைப் போட்டி மூன்று முனைப் போட்டியாக மாறியுள்ளது. இந்தச் சூழலில், “விஜய் கையில் முடிவு” என்று பேசப்படும் அரசியல் யதார்த்தம், கூட்டணி ஆட்சியின் சாத்தியக்கூறுகள் மற்றும் அதிமுக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான சி. பொன்னையனின் நிலைப்பாடுகள் ஆகியவை முக்கியமான விவாதப் பொருளாக மாறியுள்ளன.
தமிழக சட்டமன்றம் 234 தொகுதிகளைக் கொண்டது. ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்கு குறைந்தபட்சம் 118 தொகுதிகள் தேவை. இது அடிப்படை கணக்கு. 2021 தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்தது. அதிமுக 66 இடங்களுடன் எதிர்க்கட்சியாக இருந்தது. ஆனால் 2026 தேர்தலில் தவெகவின் வருகை இந்த அரசியல் சமன்பாட்டை மாற்றியுள்ளது.

விஜய் தனது கட்சியைத் தனித்து நிறுத்தி அனைத்து 234 தொகுதிகளிலும் போட்டியிட்டார். கூட்டணி பேச்சுகளை நிராகரித்தார். இளைஞர்கள், முதல் முறை வாக்காளர்கள் மற்றும் மாற்றம் விரும்பும் தரப்பினரிடையே கணிசமான செல்வாக்கைப் பெற்றுள்ளார் என்பது வெளிப்படையான உண்மை.
இதையும் படிங்க: ஸ்டாலினையே பின்னுக்குத் தள்ளிய V.S.பாபு..! நொறுங்குகிறதா கொளத்தூர் திமுக கோட்டை..?
தேர்தல் முடிவுகளின் ஆரம்ப போக்குகளும் எக்ஸிட் போல் கணிப்புகளும் ஒரு நெருக்கமான போட்டியைக் காட்டுகின்றன. சில கணிப்புகள் தவெகவுக்கு 90க்கும் மேற்பட்ட இடங்களை அல்லது அதற்கு அருகில் வெற்றியைத் தெரிவிக்கின்றன. இது 118க்கு அருகில் செல்லும் பட்சத்தில் அல்லது அதைத் தாண்டும் பட்சத்தில் விஜய் தலைமையில் தனி ஆட்சி சாத்தியமாகலாம். ஆனால் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், கூட்டணி ஆட்சி தவிர்க்க முடியாததாகிவிடும். இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன், விஜய் கையில் தான் முடிவு என்று தெரிவித்தார். கூட்டணி ஆட்சி அமைப்பது குறித்து விஜய் தான் முடிவெடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: #TNElectionResults2026: ஆட்டம் மாறி போச்சு..! TVK vs ADMK..! திமுகவின் பரிதாப நிலை..!!