கொளத்தூர் தொகுதி தமிழ்நாடு அரசியலில் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது. 2008-ல் வரையறைக்குப் பின் உருவான இந்தத் தொகுதி, 2011 முதல் தொடர்ச்சியாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் கோட்டையாக இருந்து வந்தது. மூன்று முறை (2011, 2016, 2021) ஸ்டாலின் இங்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2021-ல் அதிமுகவின் ஆதி ராஜாராம் உடன் சுமார் 70,000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற அவர், இந்தத் தொகுதியை தனது அரசியல் செல்வாக்கின் சின்னமாகக் கருதினார்.
ஆனால் 2026 சட்டமன்றத் தேர்தலில் நிலைமை மாறியது. தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் V.S. பாபு போட்டியிட்டு, ஸ்டாலினைப் பின்னுக்குத் தள்ளி ஆரம்பக் கட்ட வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை பெற்றார். இது திமுகவினருக்கு அதிர்ச்சியாக அமைந்தது.

V.S. பாபு தமிழ்நாட்டின் மூத்த அரசியல்வாதி. 2006-ல் புரசைவாக்கம் தொகுதியில் திமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றவர். பின்னர் அதிமுகவுடன் தொடர்பு கொண்டிருந்தார். எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகள் பிடிக்காததால், 2026 பிப்ரவரி 7-ல் தவெகவில் இணைந்தார். தவெகவின் இணை பொதுச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டார். 75 வயதான இவர், கொளத்தூர் போன்ற உள்ளூர் பகுதிகளில் பல ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
இதையும் படிங்க: #TNElectionResults2026: ஆட்டம் மாறி போச்சு..! TVK vs ADMK..! திமுகவின் பரிதாப நிலை..!!
இன்று சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் முதலமைச்சர் ஸ்டாலினை பின்னுக்கு தள்ளி முன்னிலை வகித்து வருகிறார். தொடர்ந்து வி.எஸ். பாபு முன்னிலை வகித்து வருவது திமுக தொண்டர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. கொளத்தூர் தொகுதி திமுகவின் கோட்டை என்று கூறப்பட்டு வந்த நிலையில் அந்தக் கோட்டையை வி.எஸ் பாபு ஆட்டம் காண வைத்ததாக கூறப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: #TNElectionResults2026: அடியோடு மாறும் அரசியல் களம்... திமுக, பாஜக, அதிமுக முக்கிய தலைகள் பின்னடைவு... தட்டித்தூக்கும் தவெக...!