தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் நியமனம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் பொறுப்பாளர்களை அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவிக்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில், பனையூர் அலுவலகத்திற்கு வந்த விஜயின் காரை தூத்துக்குடி நிர்வாகி அஜிதா ஆக்னல் மற்றும் பிற நிர்வாகிகள் முற்றுகையிட்டனர்.
விஜயின் காரை வழிமறித்த பெண் நிர்வாகியை அழைத்து தமிழக வெற்றி கழகத்தின் இணை பொதுச் செயலாளர் நிர்மல் குமார் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்பட்டிருந்த நிலையில், சமாதானத்தை ஏற்காமல் விஜயின் காரை வழிமறித்த தவெகவினர் தர்ணாவில் ஈடுபட்டனர். தவெக அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா செய்தனர். என்ன நடந்தாலும் நியாயம் கிடைக்கும் வரை நகர மாட்டோம் என்று திட்டவட்டமாக கூறி இருந்தனர்.

தூத்துக்குடியில் தமிழக வெற்றி கழகத்தை மக்களிடம் கொண்டு சேர்த்ததே அஜித்தா தான் என்றும் தமிழக வெற்றி கழகம் வளர்ச்சிக்கு அஜிதா காரணமாக இருந்தார் என்றும் தெரிவித்தார். அடிமட்ட அளவில் இறங்கி கட்சிக்காக வேலை பார்த்ததாகவும், சுவரொட்டி அடிப்பதில் இருந்து கட்சிப் பணிக்காக அர்ப்பணித்துக் கொண்டவர் அஜிதா என்றும் அப்பகுதி வாசி ஒருவர் தெரிவித்தார். பணமா பாசமா என்ற போட்டி நிலவுவதாகவும் அஜித்தாவிடம் பணம் இருக்கிறதா என்று தனக்கு தெரியாது என்று கூறிய அவர், ஆனால் விஜியிடம் பாசம் இல்லை என்று கூறினார்.
இதையும் படிங்க: இறுதிவரை விஜயோடு தான்... காரை வழிமறித்து தர்ணா செய்த TVK பெண் நிர்வாகி உறுதி...!
அதிமுகவில் இருந்து வந்த செங்கோட்டையன், விஜய்க்கு வழிகாட்டி இருக்கலாம் என்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் என்ன செய்யலாம் என்று விஜய்க்கு கூறி இருக்கலாம் என்றும் தெரிவித்தார். ஆனால் தூத்துக்குடியில் தமிழக வெற்றி கழகத்தின் வளர்ச்சிக்கு காரணம் அஜிதா என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்றும் அவர் கூறினார். அஜித்தாவை மாவட்ட பொறுப்பாளராகவோ அல்லது வேட்பாளராக கூட நிறுத்தலாம் என்றும் அவர் வெற்றி பெற வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: விஜய் தமிழ்நாட்டின் எதிர்காலம் என அறிந்தவர் செங்கோட்டையன்... ஆதவ் அர்ஜுனா பெருமிதம்..!